பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை_281 ஒருவராகத்தானே இருக்கவேண்டும்! அப்படியிருக்க, பாடியவர் வேறொருவர் என்று கூறுவது எவ்வாறு பொருந்தும் என்ற வினாத் தோன்றினால், அதற்குரிய விடையை எனக்குத் தோன்றிய அளவில் பின்வருமாறு தருகின்றேன். மொழியின் வளக்குறைவினால், பாடியவர்க்குத் தனிப் பெயர் கொடுக்க முடியவில்லை. முதலிரண்டு அடிகளில் குறிக்கப்பெற்ற திருவாதவூரடிகள் வாழ்க்கையையும், பின்னிரண்டு அடிகளில் குறிக்கப்பெற்ற மணிவாசகர் வாழ்க்கையையும் இப்பொழுது புறத்தே நின்று பார்த்துப் பாடுபவருக்கு என்ன பெயர் தருவது? இரண்டாவது மணிவாசகர் என்று கூறலாமோ என்றுகூடத் தோன்றுகிறது. குருநாதரின் அருளை முழுவதுமாகப் பெற்ற திருவாதவூரர் மணிவாசகராக மாறி, பரா அமுதாகிய திருவாசகப் பாடல்களைப் பொழிந்துவிட்டு, கூத்தன் திருவடிகளில், இதோ, இணையப்போகிறார். சாதாரண மனிதர்களுக்கு இணையப்போகின்ற நேரமோ, பிறவோ தெரிய வாய்ப்பில்லை. ஆனால், அருளாளர்கட்கு இந்த வாய்ப்பு இறைவனால் தரப்பெறுகிறது. ஆகவேதான், ‘போவோம் காலம் வந்ததுகாண் பொய்விட்டு உடையான் கழல்புகவே (605) என்று பாட முடிந்தது. இப்படிச் சொல்லிக்கொண்டு புறப்பட்டவர் மணிவாசகப் பெருமான்தான்! இந்தப் புறப்பாடு ஏதோ உடம்பை ஒர் ஊரிலிருந்து மற்றோர் ஊருக்குச் செலுத்துவது என்று பொருள் கண்டு இடர்ப்படத் தேவையில்லை. இந்த யாத்திரை ஆன்ம யாத்திரை. யாத்திரைப் பத்துப் பாடும்போது மணிவாசகரும் அவருடைய ஆன்மாவும் ஒன்றாகத்தான் இருந்தன. அச்சோப் பதிக்த்தின் தொடக்கத்தில் மணிவாசகருடைய ஆன்மா புறத்தே தனித்து நின்று திருவாதவூரர் வாழ்க்கை