பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை_0-283 "ஊன், உயிர் வேறு செய்தான் என்று முன்னரே கூறப்பெற்றமையின் இங்குக் கூறப்பெற்ற உடல் ஊன் உடம்பு அன்று என்பது வெளிப்படை இப்பொழுது அடுத்த வினாத் தோன்றுகிறது. வேறு "செய்தான் காட்டுவித்தான் என்ற இரண்டு சொற்களும் இறந்த காலத்தை அறிவிக்கும் சொற்களாகும். எனவே, இந்தப் பாடல் தோன்றியது எந்த உடம்பிலிருந்து என்ற வினாவை எழுப்பினால் விடை கூறுவது கடினம். சுந்தரரின் இந்தப் பதிகத்தின் மூன்றாவது பாடல் 'மனைவாழ்க்கை மகிழ்ந்தடியேன் சுந்தர வேடங்களால் துரிசே செயும் தொண்டன்’ (திருமுறை: 7.100-3) என்றும், நான்காவது பாடல் மடவார்கள் தங்கள் வல்வினைப் பட்டு ஆழ முகந்த என்னை என்றும் பாடுவதன் நோக்கம் என்ன ? வெள்ளை யானையில் ஏறி, இந்திரன், மால், அயன் முதலானவர்கள் வந்தனை செய்கின்ற நிலையில் கயிலை செல்லும் சுந்தரர், பழைய வாழ்க்கையை இப்பொழுது நினைத்துப் பேசுவதன் நோக்கமென்ன? இதே போன்று அடிகளாரும் அச்சோப் பதிகத்தின் ஐந்து பாடல்களில் 'பொய் எல்லாம் மெய் என்று புணர் முலையார் போகத்தே மையல் உறக் கடவேனை' (652) என்றும், பஞ்சு ஆய அடி மடவார் கடைக் கண்ணால் இடர்ப்பட்டு நெஞ்சு ஆய துயர் கூர நிற்பேன்’ (65:4) என்றும், வினை பெருக்கிக் கொந்து குழல் கோல் வளையார் குவிமுலைமேல் விழுவேனை (65) என்றும், தையலார் மையலிலே தாழ்ந்து விழக் கடவேனை' (656) என்றும், காதலின் மிக்கு அணியிழையார் கலவியிலே விழுவேனை' (657) என்றும் பாடியுள்ளமை இங்கு நோக்கத் தக்கது. -> - - -