பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 ல் திருவாசகம் சில சிந்தனைகள் 5 சுந்தரரின் நொடித்தான் மலைப் பாடல்களையும், அடிகளாரின் அச்சோப் பதிகத்தின் இப்பகுதிகளையும் நோக்கும்பொழுது முன்னர்க் கூறிய கருத்து வலுப்படுதலைக் காணலாம். மணிவாசகரின் அந்தராத்மா புறத்தே நின்று திருவாதவூரர் வாழ்க்கையையும் மணிவாசகரின் வாழ்க்கை யையும் அணித்தணித்தே வைத்துப் பார்ப்பது போலச், சுந்தரரின் அந்தராத்மாவும் புறத்தே நின்று அவரின் பழைய வாழ்க்கையையும் ஊன், உயிர் வேறு செய்த பிறகு வெள்ளையானையில் செல்லும் நிலையையும் அணித்தணித்தே வைத்துப் பாடுவதைக் காணலாம். தையலார் மையல்பற்றிப் பாடப்பெற்ற தொடர்கள் போக எஞ்சிய தொடர்களை ஒருங்கிணைத்துப் பார்ப்பது நலம். முத்தி நெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேன்' (656) என்றும், நெறியல்லா நெறிதன்னை நெறியாக நினைவேன்” (65) என்றும், 'மண் அதனில் பிறந்து, எய்த்து, மாண்டு, விழக்கடவேன்” (653) என்றும், வெந்து விழும் உடல் பிறவி மெய்யென்று வினைபெருக்கியவன்” (655) என்றும், சாதல் பிறப்பு என்னும் தடம் சுழியில் தடுமாறியவன்.” (657) என்றும், செம்மை நலம் அறியாத சிதடரொடும் திரிவேனை' (658) என்றும் பாடியுள்ளதை வரிசைப்படுத்திப் பார்த்தால் இன்று உலகிடை வாழும் ஒரு சராசரி மனிதனின் வாழ்வையே படம்பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளன. இந்த ஒன்பது பாடல்களின் முதலிரண்டு அடிகள் என்பது நன்கு விளங்கும். இப்பொழுது ஒர் ஐயம் இயல்பாகத் தோன்றும். 'நீக்கிமுன் எனை (435 என்று தொடங்கும் அதிசயப் பத்தின் எட்டாம் பாடலையும், உருத்தெரியாக் காலத்தே' (477) என்று தொடங்கும் கண்ட பத்தின் மூன்றாம்