பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை_285 பாடலையும் மானேர் நோக்கி மணவாளா (499) என்று தொடங்கும் குழைத்த பத்தின் நான்காம் பாடலையும் பாடிய அடிகளாரா அச்சோப் பதிகத்தைப் பாடுகிறார் என்ற வியப்புத் தோன்றாமலிராது. ஆனால், மேலே காட்டிய மூன்று பாடல்களும் திருவாதவூரராக இருந்து மாறிய மணிவாசகர் பாடிய பாடல்கள் அல்ல. கூத்தன் திருவருளால் மணிவாசகர் என்ற மனிதர் தம்மை முற்றிலுமாக இழந்து, பின்நோக்குப் பார்வையில் தம்முடைய பூர்வ ஜன்மம்பற்றி அறிந்து பாடியதாகும் என்று அந்த அந்தப் பகுதியில் கூறியுள்ளோம். ஆனால், இந்த நினைவு கணநேரத்தில் தோன்றி, பாடலாக வெளிப்பட்டவுடன் அந்நினைவும் மறைந்துவிடுகிறது. அடுத்த கணத்தில் மணிவாசகர் அங்கே தோன்றுகிறார். இந்தப் பின்நோக்குப் பார்வை அவரை விட்டு அகலுமாறு செய்துவிட்டான் கூத்தன். இந்த அடிப்படையை மனத்துட் கொண்டு பார்த்தால், அச்சோப் பதிகத்தில் வரும் பாடல்களின் முற்பகுதியில் அடிகளார் கூறியவை அனைத்தும் மெய்யாக நடைபெற்றவை என்று கூறத்தேவையில்லை. இவற்றுள் சில அனுபவங்கள், சில நிகழ்ச்சிகள் திருவாதவூரர் வாழ்க்கையில் என்றோ நடைபெற்றிருக்கலாம். அப்படியானால் திருவாசகத்தின் இறுதிப் பகுதியில், அச்சோப் பதிகத்தில், இவ்வளவு விரிவாகத் தம்முடைய பழைய வாழ்க்கையில், இவை நிகழ்ந்தனபோல அடிகளார் ஏன் பாடவேண்டும்? ஆழ்ந்து சிந்தித்தால் உண்மை விளங்காமற் போகாது. திருவாசகம் என்ற பரா அமுதைப் படைக்க விரும்பிய கூத்தன், திருவாதவூரரை அதற்கென்றே படைத்தான். அமைச்சர் வாழ்க்கையில் பல்வேறு அனுபவங்களைப் பெறுமாறு செய்தான். அப்படியே அந்த வாழ்நாள்