பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286--திருவாசகம் சில சிந்தனைகள் 5 கழிந்துவிடாமல் அவருடைய வாழ்க்கையைக் கூத்தன் திசை திருப்பினான். திருவாதவூரரென்ற தனிமனிதரை ஆட்கொண்டு வீடுபேற்றை அருள்வதுமட்டும் கூத்தனின் திருவருட் குறிப்பன்று. இதுதான் அவனுடைய திருவருட் குறிப்பு என்றால், திருப்பெருந்துறையில் திருவடி தீட்சை செய்தவுடனேயே அடிகளாரை உடனழைத்துச் சென்றிருக்கலாம். அப்படிச் செய்யாமல் தில்லைக்கு வருக என்று ஆணையிட்டுவிட்டு மறைந்ததன் நோக்கம் என்ன? அவனுடைய ஆணையின்படி தில்லையை அடைந்த அடிகளாருக்கு, அவர் எதிர்பார்த்த எதையும் கூத்தன் செய்யவில்லையே! ஏன்? திருவாசகம் முற்றிலுமாக வெளிவரவேண்டும் என்பது கூத்தன் திருவுள்ளம் ஆதலால், அடிகளாரை அழைத்துக் கொள்ளவில்லை. யாத்திரைப் பத்து, அச்சோப் பதிகம் என்ற இரண்டும் தவிர ஏனைய பாடல்கள் யாவும் இறையனுபவத்தை இழந்த அடிகளார். அதனை மீட்டும் பெற அவாவிய பாடல்களாகவே அமைந்துள்ளன. இந்த நிலைமை முற்றிலும் மாறி யாத்திரைப் பத்தும், அச்சோப் பதிகமும் வெளிவருகின்றன. ஒரு ஊருக்குச் சென்றவர், அங்குச் செய்யவேண்டிய பணியை முடித்தவுடன் திரும்பவும் தம்முடைய ஊருக்குப் புறப்பட ஆயத்தம் செய்வதைப்போல் அமைந்துள்ளது யாத்திரைப் பத்து. அதிலேயே, நிற்பார் நிற்க நில்லா உலகில் நில்லோம் இனிநாம் செல்வோமே (61) என்றும், போவோம் காலம் வந்தது காண் பொய்விட்டு உடையான் கழல் புகவே (605) என்றும் பாடியுள்ளார் ஆதலின், சாதி Յ-ւDԱյ, வேறுபாடுகளையெல்லாம் கடந்து மனித சமுதாயம் முழுவதையும் உடன் செல்ல அழைக்கின்றார். இனி, இந்த உலகில் வாழவேண்டிய சூழ்நிலையோ, திருவாசகம் பாடவேண்டும் என்ற கடப்பாடோ தமக்கு இல்லை