பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை_287 என்பதை உணர்ந்த அடிகளார் புறப்படச் சித்தமாகி விட்டார். தம்முடைய முன்னேற்றம் ஒன்றையே கருதிப் புறப்படாமல், எவ்வளவு மிகுதியான மக்களை அழைத்துச் செல்ல முடியுமோ, அவ்வளவு மிகுதியானவர்களை அழைக்கின்றார். யாத்திரைப் பத்தோடு திருவாசகம் நின்றிருக்கலாம். இந்த அளவிலேயேகூட அடிகளாரின் பரந்த உள்ளமும், உயிர்கள் மாட்டுப் பொங்கி வழியும் கருணையும் முழுவதுமாக வெளிப்படக் காண்கிறோம். அப்படியானால் அச்சோப் பதிகம் எதற்கு? திருவாசகத்தின் உயிர்நாடியாக விளங்கும் இந்த அச்சோப் பதிகம் அடிகளாரின் கருணைக்குத் தனியான ஒர் எடுத்துக்காட்டாகும். அதைப்பற்றிச் சற்றுச் சிந்திப்பது நலம். யாத்திரைப் பத்தில் உடனுறையும் மக்களை விளித்து, ‘போமாறு அமைமின் (607) என்றும், சாத்தோடு உடன் போவதற்கே ஒருப்படுமின் (609) என்றும், திருத்தாள் சென்று சேர்வோமே (612) என்றும், யோரபோத)ப் புரிமின் (6.13) என்றும் வரும் தொடர்களை இணைத்துப் பார்ப்போமேயானால் மக்களையெல்லாம் ஒன்றுதிரட்டி, அதற்குத் தலைமை வகித்து நடாத்திச் செல்லும் ஒரு பெருவீரராக அடிகளார் காட்சியளிப்பதை நாம் காணமுடிகிறது. இப்பொழுது ஒரு புதிய பிரச்சினை தோன்றுகிறது. அடிகளாரால் அழைக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒரே மனநிலையில் உள்ளவர்கள் அல்லர். உலக வாழ்க்கையே பெரிதென்று கருதி, அடிகளார் அழைப்பை ஏற்றுக்கொள்ளாதவர்கள் பலர் இவ்வுலகிடை உள்ளனர். ஆனால், புறப்படத் தயாராக இருப்பவர்கள்கூட அனைவரும் ஒரே மனநிலையில் உள்ளவர்களா என்றால், ஆம் என்று உறுதியாகக் கூறமுடியாது. அவருள் பலருடைய மனத்தில் அடிகளாருடன் போவதற்குத் தங்களுக்குத்