பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288_திருவாசகம் சில சிந்தனைகள்-5 தகுதியுண்டா என்ற ஐயம் விசுவரூபம் எடுக்கிறது. அவரவர்கள் வாழ்வில் பாலுணர்விலிருந்து மீளமுடியாதவர்கள் பலர்; முத்தி நெறி அறியாத மூர்க்கரொடு வேண்டியோ வேண்டாமலோ சேர்ந்து பழகவேண்டிய நிலையில் உள்ளவர் சிலர் நெறியல்லா நெறியை இதுவே சிறந்த நெறி என்று சிலர் கூற, அதுவே நன்னெறி என்று நினைப்பவர் சிலர்: ஏதோ பிறந்துவிட்டோம் வெந்ததைத் தின்று வேளை வந்தபோது சாகலாம் என்று நினைப்போர் சிலர்; 'செம்மை நலம் அறியாத சிதடரொடு பழகிவிட்டு அந்த உறவை முறித்துக் கொள்ள முடியாமல் அலமருகின்றவர் சிலர் என்ற முறையில், அடிகளாரின் பின்னேயுள்ள சாத்து (கூட்டம்) அலமருகின்றது. தலைமை வகித்துச் செல்லும் அடிகளார், அதீத நிலைக்கு வளர்ந்துவிட்டமையின், இந்த அலமருகின்ற மக்களை நோக்கி ஒரு சிறிதும் அஞ்சத் தேவையில்லை; இவ்வளவு குற்றங்கள் நம்மிடம் இருந்தாலும் நம்மை மன்னித்து ஆட்கொள்ளத் தயாராக உள்ளான் தலைவன் என்ற கருத்தை அச்சோப் பதிகத்தின் ஒவ்வொரு பாடலின் முடிவிலும் யார் பெறுவார் அச்சோவே' என்று பல்லவிபோலத் திருப்பித் திருப்பிப் பாடுகிறார். அப்படிச் சொல்வதன் மூலம், ஐயமுற்று அலமருகின்றவர்கள் மனத்தில் ஒரு தென்பு உண்டாக்க வேண்டும் என்னும் கருத்தில், இக்குற்றங்களெல்லாம் தம்மிடம் இருந்ததுபோலவும், அவற்றைப்பற்றி ஒருசிறிதும் கவலைப்படாமல் குருநாதர் தம்மை ஆண்டுகொண்டார் என்றும் இப்பதிகத்தின் ஒன்பது பாடல்களிலும் பாடியுள்ளார். அமைதியாக நின்று ஒன்பது பாடல்களிலும் அடுக்கப்பெற்றுள்ள குற்றங்களை ஒருசேர எண்ணிப் பார்த்தால், மக்கள் சமுதாயம் முழுவதும் இதனுள் --