பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை_289 அடங்கிவிடக் காணலாம். ஆகவே, அஞ்சித் தளர்ந்து இனி என்னே உய்யுமாறு என்று எண்ணி, அலமரும் மனித சமுதாயம் முழுவதையும் உளப்படுத்தி அவர்கட்கு ஒரு நம்பிக்கையை உண்டாக்க வேண்டி, இறைவன் அருளால் இப்பதிகத்தை அடிகளார் பாடியருளினார் என்று நினைப்பதில் தவறில்லை. சாதி சமயப் பிளவுகளாலும், பண்பாட்டு வேறுபாடுகளாலும் அன்றும் இன்றும் என்றும் உலகிடை வாழும் மக்கட் சமுதாயம் குற்ற உணர்வு மேலிட்டு வாழ்ந்துவருகிறது. இந்த நிலையில் இவ்வளவு குற்றங்களை நீங்கள் செய்திருந்தாலும் உங்களை மன்னித்து ஆட்கொள்வான்’ என்று கூறவிரும்பிய அடிகளார் சற்றுச் சிந்தித்தார். அவ்வாறு கூறினால் பலர் மனம் புண்படும். எனவே, அடிகளார் கூறும் வழியில் வருவதற்கு அவர்கள் முன்வரமாட்டார்கள். இதையல்லாமல் ஒவ்வொரு வருக்கும் அகங்காரப் பிரச்சினை (ego problem) என்ற ஒன்று உண்டல்லவா? 'இவ்வளவு குற்றங்களைச் செய்தவர்களே' என்று அவர்களை விளித்துக் கூறினால் அவர்களுடைய அகங்காரம் அதை ஏற்றுக்கொள்ளாமல் சிறி எழும். இவற்றையெல்லாம் மனத்துட் கொண்ட அடிகளார். இத்தனை குற்றங்களையும் தாமே செய்ததாகப் பாடியுள்ளமைதான் அச்சோப் பதிகத்தின் தனிச்சிறப்பாகும். இப் பதிகத்தின் இறுதியில் வரும் யார் பெறுவார் என்ற தொடருக்கு என்னையன்றி யார் பெறுவார் என்று பொருள் கொள்ளாமல் “யாரும் பெறுவார்’ என்று உம்மை விரித்துப் பொருள் கொள்வதே சால்புடையதாகும். குற்றமே புரிந்துழலும் கடையனும் கடைத்தேற வழிகாட்டுவது அச்சோப் பதிகமாகும். அதனால்தான் அதனைத் திருவாசகத்தின் முடிமணி என்று கூறுகிறோம்.