பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குலாப் பத்து 21 எனவே, அடிகளாருக்கும் பூசலார் வரலாறு தெரிந்திருக்க நியாயமுண்டு. இதனை மனத்திற் கொண்டு பார்த்தால், 'செம்மை மனத்தால் திருப்பணிகள் செய்வேனுக்கு என்ற தொடருக்கு, பூசலார் போன்றே இவரும் ஏதோ ஒருவகைத் திருப்பணியில் ஈடுபட்டிருக்கலாம் என்று நினைக்கத் தோன்றுகிறது. பாடலில் அடுத்துவரும் தொடர்கள் கொஞ்சம் புதுமையாக திருப்பணிகள் செய்வேனுக்கு இம்மைதரும் பயன் இத்தனையும் ஈங்கு ஒழிக்கும்’ என்ற முறையில் செல்கின்றன. 'இம்மை தரும் பயன்’ என்ற தொடருக்கு இப்பிறப்பில் கிடைக்கும் பொறி, புல இன்பங்கள் எனப் பலரும் பொருள் கூறிச் சென்றனர். திருப்பணிகள் சாதாரண மனநிலையில் செய்யப் பெற்றால்கூட இம்மை தரும் பயன்களாகிய பேர், புகழ் என்பவை கிட்டும். இவ்வாறில்லாமல் செம்மை மனத்தால் திருப்பணிகள் செய்தல்' என்பதன் பொருளென்ன? மிக நீண்ட காலமாகத் திருப்பணி என்ற சொல்லை இறைவனோடும், திருக்கோயிலோடும் தொடர்புபடுத்தியே பேசி வருகின்றோம். இறைதிருப்பணி, கோயில்திருப்பணி, என்று சொல்லும் மரபு உண்டேதவிர, மக்கள் திருப்பணி என்றோ, சமூகத் திருப்பணி என்றோ சொல்லும் மரபு இல்லை. இக்கருத்தை மனத்திற் கொண்டு செம்மை மனத்தால் திருப்பணிகள் செய்வேனுக்கு என்ற தொடரை மீண்டும் சிந்திக்கலாம். புண்ணியம் உட்பட ள்வ்விதப் பயனையும் கருதாமல் தொண்டைத் தொண்டிற்காகவே செய்யும் ஒரு நிலையைத்தான் 'செம்மை மனத்தால் திருப்பணிகள் செய்வேனுக்கு என்று அடிகளார் கூறுகின்றார். செம்மை மனத்தால் செய்யும் இத்திருப்பணிக்கு, பெயர், புகழ்