பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிவுரை 'திருவாசகம். சில சிந்தனைகள்’ என்ற நூல் இந்த ஐந்தாவது பகுதியோடு நிறைவுபெறுகின்றது. இதனை எழுதத் தொடங்கிய காலத்தில் இரண்டு பகுதிகளில் முடித்துவிடலாம் என்று கருதியிருந்தேன். என்னையும் மீறி ஐந்து பகுதிகளாக விரிந்துவிட்டது. இதனை என் அறிவின் துணை கொண்டோ கற்ற கல்வியின் துணை கொண்டோ ஆராயும் ஆற்றலைக் கொண்டோ எழுதினேன் என்று சொன்னால், அது பெருந்தவறாகும். இந்நூலை எழுதும்போது மேலே கூறிய எதுவும் எனக்குப் பெருமளவு கைகொடுத்து உதவவில்லை என்பது முற்றிலும் உண்மை. ஏதோ தோன்றியதையெல்லாம் ஆங்காங்கே எழுதியுள்ளேன். LJöiy பாடல்களுக்கு, பொழிப்புரையும் கருத்துரையும் கலந்தமுறையில் எழுதப்பெற்றுள்ளது போலத் தோன்றினாலும் உண்மையில் அவையும் மனத்தில் தோன்றிய சிந்தனைகளுக்கு வடிவுகொடுத்தமையே ஆகும். ஒவ்வொரு பகுதியையும் எழுதி முடித்தபிறகு அந்தப் பகுதிப் பாடல்களைத் தொடர்ந்து படிக்கச் சொல்லிக் கேட்டதால் மனத்தில் தோன்றிய சிந்தனைகளுக்கு இடம் கொடுக்கும் வகையில் எழுதப்பெற்றதே பின்னுரை என்ற தலைப்பின்கீழ் வருபவையாகும். சில சமயங்களில் ஒவ்வொரு பாடலுக்கும் எழுதப்பெற்றுள்ள சிந்தனை பின்னுரையில் வரும் சிந்தனையோடு மாறுபட்டு நிற்பதையும் என்னால் அறியமுடிகின்றது. உதாரணமாக, திருவெம்பாவைப் பாடல்களுக்கு அடியில் எழுதப் பெற்றுள்ள சிந்தனையில் பெரும்பகுதி வாலாயமாகப்