பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிவுரை_293 அடிகளார் காலம் தமிழர்களைப் பொறுத்தமட்டில் மாபெரும் கவிஞர்கள், காப்பியப் புலவர்கள், நீதிநூல் வல்லவர்கள் என்போர் பலர் இருந்தும் அவர்களுடைய நம்பத்தக்க உண்மையான வரலாற்றை எழுதிவைக்கும் பழக்கத்தைத் தமிழர்கள் ஏனோ மேற்கொள்ளவில்லை. அதனுடைய பயன். இளங்கோவடிகள், திருவள்ளுவர், கம்பர் போன்ற தமிழறிஞர் யாரைப் பற்றியும் ஆதாரபூர்வமாக ஒன்றும் தெரியாமல் போய்விட்டது. இப்பெருமக்களின் இயற்பெயர்கள், இவர்கள் வாழ்ந்த காலம் என்பவற்றை அறிய நேரடிச் சான்றுகள் எதுவுமில்லை. வரலாற்றறிவு மிகுந்திருந்த சேக்கிழார் பெருமான் பெரிய புராணத்தில் மூவர் முதலிகள் வரலாற்றைப் பாடியமையால் அவர்களுடைய காலத்தை ஒரளவு அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால், மணிவாசகப் பெருமான் பெரிய புராணத்தில் இடம்பெறவில்லை. இந்த நிலையில் மறைமலை அடிகள் போன்றவர்கள் அடிகளாரைக் கி.பி. மூன்றாம் நூற்றாண்டிற்குக் கொண்டு ச்ென்றுவிட்டனர். திருவாசகப் பாடல் அமைப்பு, ஆகமங்களுக்கு அடிகளார் கொடுத்த இடம், திசைச் சொற்களைப் பயன்படுத்திய முறை, தில்லையைப் பற்றிப் பல பாடல்கள் இயற்றியமை ஆகிய அனைத்தும் மூன்றாம் நூற்றாண்டு என்ற கொள்கைக்கு முற்றிலும் முரணானவை. திருமுருகாற்றுப்படையை விட்டுவிட்டால் பக்தி இலக்கியத் திற்குப் பிள்ளையார்சுழி இட்ட காரைக்கால் அம்மையார் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் ஆவார். அவர் காலத்தில் கூத்தன் ஊர்த்துவ தாண்டவம் செய்யும் திருவாலங்காடு இருந்ததேதவிரத் தில்லை என்பது இல்லை. ஐந்தாம் நூற்றாண்டில்தான் தில்லை தோன்றிற்று என்பதைத் திருவாலங்காட்டுத் தல புராணமும் ஏனைய சான்றுகளும் உறுதியாகத் தெரிவிக்கின்றன. இந்த நிலையில்