பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294-திருவாசகம் சில சிந்தனைகள்-5 தில்லைக் கூத்தனை அதிகம் பாடும் அடிகளார் மூன்றாம் நூற்றாண்டில் இருந்திருக்க நியாயமேயில்லை. தேவார காலத்திற்கூட ஆகமங்கள் அதிகம் சிறப்புப் பெறவில்லை. 8250 பாடல்களையுடைய দ্য ৫p திருமுறைகளில் ஆகமம் என்ற சொல்லே நான்கு (கங்கை பதிப்பகம் வெளியிட்டுள்ள மூவர் அருளிய தேவாரத்திருப்பதிகங்கள் பாடல் 5377, 8083, 8204, 8248) இடங்களில் மட்டுமே பேசப்பெறுகிறது. அந்த நான்கில் ஒரே ஒரு முறைதான் நாவரசர் பேசுகிறார்; ஏனைய மூன்றும் நம்பியாரூரரால் பேசப்பெற்றுள்ளன. இதில் ஒருவகைப் பொருத்தம் உள்ளது. திருக்கோயிலில் இறைவனைத் தொட்டு வழிபடும் சிவாசாரியார்கள் குடியில் தோன்றியவர் நம்பியாரூரர் ஆதலின், அவருடைய ஆயிரம் பாடல்களில் மூன்று முறை ஆகமம் என்ற சொல் பயன்படுத்தியுள்ளது பொருத்தமானதேயாகும். நாவரசருக்குப் பின் 150 ஆண்டுகள் கழித்து நம்பியாரூரர் 8-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றியவர். ஆகமகங்கள் அக்காலத்தில் அதிகம் செல்வாக்குப் பெற்றன என்று நினைப்பதில் தவறில்லை. ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் (1-4) என்றும், மன்னும் மாமலை மயேந்திர மதனிற் சொன்ன ஆகமம் தோற்றுவித் தருளியும் (2-9,10) என்றும் பாடுவதால் அடிகளார் காலத்தில் ஆகமம் என்பது பெருவழக்கினதாய் வளர்ந்துவிட்டது என்பதை அறிய முடிகிறது. 'அது எந்துவே" என்ற திசைச்சொல்லைப் பயன்படுத்தும் ஒருவர், மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்தார் என்று சொல்வது பொருத்தமற்றது.