பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிவுரை 295 நரகொடு சுவர்க்கம் நானிலம் புகாமல் பரகதி பாண்டியற்கு அருளினை போற்றி (4:213,214) என்று தம் காலத்து இருந்த பாண்டியனை அடிகளார் குறிப்பிடுகிறார் என்றால், அவன் எத்தனை சிறப்பு வாய்ந்த மாபெரும் சிவபக்தனாக இருந்திருக்க வேண்டும்! திருவிடைமருதூர் மும்மணிக்கோவையில் ஒரு பாண்டிய மன்னன் மாபெரும் சிவபக்தனாக வாழ்ந்தான் என்பதை விரிவாகக் கூறிவ்ரும் பட்டினத்துப் பிள்ளையார் பெரிய அன்பின் வரகுண தேவரும் (28-55) என்று பாடுகையில் பாண்டியனின் பெயரையே குறிப்பிடுகின்றார். பரகதி பாண்டியற்கருளினை போற்றி என்று அடிகளாரால் சிறப்பிக்கப்பெறும் பாண்டியனும் பட்டினத்துப் பிள்ளையார் 'பெரிய அன்பின் வரகுணதேவரும்’ என்று குறிக்கும் பாண்டியனும் ஒருவனேயாவான் என்று கொள்வது பொருத்தமேயாகும். இரண்டாம் வரகுணன் எல்லையற்ற இறையன்பு காரணமாக அரசாட்சியைத் தன் தம்பியாகிய அவனிநாராயணன் என்பவனிடம் ஒப்படைத்துவிட்டு, திருக்கோயில் வழிபாட்டிலேயே பொழுதைச் செலவழித்தான். அவன் எவ்விதப் போரிலும் ஈடுபடாமையால் பொதுவாக அரசர்களுக்கு அவர்கள் வெற்றியைப்பற்றிப் பேசும் மெய்க்கீர்த்தி எதுவும் இரண்டாம் வரகுணனுக்கில்லை. ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்த அவனிநாராயணன், தான் செய்யும் செயல்களையெல்லாம் அரசன் பேரிலேயே செய்ய வேண்டிய கடப்பாடுடையவனாய் இருந்தான். அவன் அளித்த, பிரசித்திபெற்ற, 'தளவாய்புரம் செப்பேடுகள் வரகுணனைப் பற்றிப் பேசவரும் பொழுது ஒரு புதிய முறையில் அவன் புகழைப் பேசுகின்றன, அச்செப்பேடு பிள்ளைப் பிறை சடைக்கு அணிந்த பினாகபாணி உளத்துஇருத்தி உலகம் காக்கின்ற நாளில்’ என்று தொடங்குகின்றது. இரண்டாம் வரகுணனுக்கு