பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296-திருவாசகம் சில சிந்தனைகள்-5 எவ்வித மெய்க்கீர்த்தியும் சொல்லாமல் அவன் சிவபக்தியையே மெய்க்கீர்த்தி போலச் சொல்கிறது. பட்டினத்துப் பிள்ளை குறித்த வரகுணனும், அடிகளார் குறித்த பாண்டியனும், தளவாய்புரச் செப்பேடு குறித்த பாண்டியனும் இரண்டாம் வரகுணனேயாவான் என்பது உறுதியாகிறது. இந்த இரண்டாம் வரகுணன் கி.பி. 862 முதல் 880 வரை ஆண்டவனாவான். இத்தனை சான்றுகளுக்கும் மாறாக அடிகளாரை மூன்றாம் நூற்றாண்டினர் என்று கூறும் மறைமலை அடிகள் போன்ற ஒரு சிலரின் கொள்கைக்கு ஆதாரமாக நிற்பவை நாவரசர் பெருமானின் இரண்டு பாடல்களாகும். ᎽᏠ©ᎧlᏗ, நரியைக் குதிரை செய்வானும் நரகரைத் தேவுசெய்வானும் விரதங் கொண்டாடவல்லுரனும் விச்சின்றிநாறுசெய்வானும் ...ஆரூர் அமர்ந்த அம்மானே (திருமுறை: 4-4-2) என்பதும் வைகைத் திருக்கோட்டில் நின்றதோர் திறமும் தோன்றும் (திருமுறை:6:18-9 ) என்பதும் ஆகும். முதலில் காட்டிய உதாரணத்தில் நரியைக் குதிரை செய்வான் என்று வந்துள்ளது. நரி பரியாக்கிய செயல் அடிகளாருக்காகச் செய்யப்பட்டது என்று ஏற்றுக்கொள்ளும் இவர்கள், இதனை நாவரசர் பாடினார் என்றதால் அடிகளார் அவருக்கும் முற்பட்டவர் ஆவார் என்ற முடிவுக்கு வந்தனர். இதிலுள்ள சிக்கல் நன்று கவனிக்கப்பட வேண்டும். இவர்கள் கருத்துப்படி இதுமுன்னரே நடைபெற்றதானால் நரியைக் குதிரை செய்தானும் என்று இறந்த கால வாய்ப்பாட்டில் இருந்திருக்க வேண்டும். அவ்வாறில்லாமல் செய்வான்