பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிவுரை_297 என்றிருப்பதால், அவன் செய்யக்கூடியவன் என்ற பொருளையே தரும். அடுத்து வரும் நரகரைத் தேவு செய்வான் விரதங் கொண்டு ஆட வல்லான் விச்சின்று நாறுசெய்வான் என்னும் மூன்று தொடர்களும் எதிர்கால வாய்பாட்டில் அமைந்திருத்தலைக் காண்டல் வேண்டும். முதற் பகுதிக்கு மதுரையில் நரி பரியாக்கிய கதை என்றால் நரகரைத் தேவு செய்வான் என்பதற்கு எந்தக் கதையைச் சொல்வது? விரதங் கொண்டு ஆட வல்லான் என்பதற்கு எந்தக் கதையைச் சொல்வது? இந்த நான்கையும் எதிர்கால வாய்பாட்டால் கூறிய நாவரசர் பெருமான் நடந்த நிகழ்ச்சிகளைக் கூறும்போது இறந்த கால வாய்பாட்டால் கூறுவது நோக்கத்தக்கது. மன்மதனை எரித்த கதையைக் "கொம்பு நல் வேனிலவனைக் குழைய முறுவல் செய்தானும் (திருமுறை :44-4) திரிபுரம் எரித்த செயலை, “செம்புனல் கொண்டு எயில் மூன்றும் தீயெழக் கண் சிவந்தானும் (திருமுறை:44-4) என்று இரண்டு இடங்களிலும் 'செய்தானும்', 'சிவந்தானும் என்ற இறந்த கால வாய்பாட்டால் குறிக்கப்பட்டமை நோக்கத்தக்கது. எனவே, 'நரியைக் குதிரை செய்வானை' என்பதை நரி பரி யாக்கிய கதை என்று கொண்டு இடர்ப்படாமல் இறைவனுடைய மாபெரும் ஆற்றலை (அகடி தகடினா சக்தி) எடுத்துக் கூறும் தொடர்கள் என்றே கொள்ளவேண்டும். இதே போன்று வைகைத் திருக்கோட்டில் நின்றது ஓர் திறம்’ என்பதற்கு வெள்ளத்தால் என்றுமே மதுரை அழிந்துபடாமல் வெள்ளம், கரையோடு நின்றுவிட்டது என்ற ஒரு செய்தியைக் குறிப்பது என்றே கொள்ள வேண்டும். இதன் எதிராக அடிகளார் காலத்தில் வையை உடைப்பெடுத்துக்கொண்டு ஊரை அழிக்க முற்பட்டதே தவிரத் திருக்கோட்டில் நிற்கவில்லை. உடைப்பு எடுத்ததால்தானே வந்தியின் பங்கை அடைக்கச் சொக்கன் மண் சுமந்தான்.