பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிவுரை 0_299 வைணவமும் பாண்டி நாட்டுப் பகுதியில் வளர்ந்து நின்றது. பெரியாழ்வாரும், அவர் மகளாராகிய ஆண்டாள் நாச்சியாரும் தீவிரமாக வைணவத்தைப் பரப்ப முயன்றனர். இவர்களுக்கு உறுதுணையாக பூரீமாறன்பூரீவல்லபன் என்ற ஒரு பாண்டியச் சிற்றரசன் ԼյTւD 68)6]foot of off std; இருந்துகொண்டு பூரீவில்லிபுத்துர்ப் பகுதியை ஆட்சி செய்துவந்தான். பாண்டி நாட்டில் பரவியிருந்த சமணம் ஞானசம்பந்தருக்குப் பின் வழக்கு ஒழிந்தது. ஆனால், பெரியாழ்வார் பரப்பிய வைணவம் ஓங்கி நின்றது. இந்த நிலையில் அடிகளார் தோன்றுகிறார். பாண்டி நாட்டுப் பகுதி இந்தச் சமயப் பூசல்களால் என்ன நிலையை அடைந்தது என்பதை அடிகளார் பேசுகிறார்: ஆத்த மானார் அயலவர் கூடி நர்த்திகம் பேசி நாத்தழும்பேறினர் (4:46.47) விரதமே பரம் ஆக வேதியரும் சரத மாகவே சாத்திரங் காட்டினர் சமய வாதிகள் தத்தம் மதங்களே அமைவதாக அரற்றி மலைந்தனர் மிண்டிய மாயா வாத மென்னுஞ் சண்ட மாருதம் சுழித்து அடித்து ஆஅர்த்து உலோகாயதன் எனும் ஒண்திறல் பாம்பின் கலா பேதத்த கடுவிட மெய்தி (4:50-57) என்று பாடியுள்ளமையால் அவர் காலத்தில் தமிழகத்தின் தென்பகுதியில் இருந்த பல்வேறு சமயங்கள், அவற்றிடையே நிகழ்ந்து வந்த உட்பூசல்கள் என்பவை தெளிவாகத் தெரிகின்றன. அடிகளாரை மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்று கூறுவதற்குத் தமிழகத்தில் அன்று காணப்பட்ட இந்த நிலை முற்றிலும் பொருந்தாததாகும்.