பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 திருவாசகம் சில சிந்தனைகள்-5 என்பவற்றோடு புண்ணியமும் கிட்டும். இவை ஒன்றையும் அடிகளார் சட்டை செய்யாமல் இம்மை தரும் பயன் இத்தனையும் ஈங்கு ஒழிக்கும்’ என்று கூறுகிறார். புண்ணியம்கூடப் பொன் விலங்கு ஆதலின் பெயர், புகழ், புண்ணியம் ஆகிய அனைத்தையும் இங்கு ஒழிக்கும் படியான நல்லருளைக் கூத்தன் செய்தான் என்றபடி இக்கருத்தை மனத்துட் கொண்டு பாட்டை மறுபடியும் பார்த்தால், அடிகளார் வாழ்க்கையில் செம்மை மனத்தோடு ஏதோ ஒரு திருப்பணி நடைபெற்றிருக்க வேண்டும். அத்திருப்பணி காரணமாகக் கிடைக்கக்கூடிய பேர், புகழ், புண்ணியம் ஆகிய அனைத்தையும் அடிகளார் துறந்துவிட்டார் என்று நினைக்கத் தோன்றுகிறது. எத்தகைய திருப்பணியை எப்போது செய்தார் என்பது விளங்கவில்லை. குருநாதர் உபதேசம் பெற்றபிறகு திருப்பெருந்துறைக் கோயிலை இவரே கட்டினார் என்று வழங்கும் பழங்கதையை நம்புபவர்களும் உண்டு. இவற்றையெல்லாம் மனத்துள் வைத்துப்பார்த்தால் செம்மை மனத்தால் திருப்பணிகள் செய்வேனுக்கு என்ற தொடரின் பொருள் நன்கு விளங்காததுடன் குழப்பத்தைத் தருவதாகவும் உள்ளது.