பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300-திருவாசகம் சில சிந்தனைகள்-5 ஆறாம் நூற்றாண்டின் கடைப்பகுதியில் தோன்றிய பக்தி இயக்கம், உணர்வை அடிப்படையாகக் கொண்டது. அந்தக் காலத்திலேயே அறிவுவாதம், தருக்கம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு சைன, பெளத்த சமயங்கள் சைவத்தோடு மாறுபட்டு நின்றன. இவை இரண்டும் அடங்கியவழி, அறிவுவாதத்தை அடிப்படையாகக் கொண்ட ஏகான்ம வாதமும் உபநிடதக் கொள்கைகளும் எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சங்கரரால் வீறு கொண்டு எழுந்தன. இவையெல்லாம் ஒரு புறமிருக்க, இதுவரை தமிழகத்தில் அதிகம் பேசப்பெறாத யோகம், சக்கரம் என்பவை பற்றிப் பேசும் திருமூலரும் இந்தக் காலகட்டத்தில் தோன்றினார். ஆனால், 6ሻ)öF6ዉ! சித்தாந்தத்தையும், அதில் ஒரு பகுதியாக யோகம் முதலியவற்றையும் கூறிய திருமூலர் என்ன காரணத்தாலோ தமிழகத்தில் அதிகச் சிறப்புப் பெறவில்லை. ஆனால், திருமூலரின் செல்வாக்கு அடிகளாரைப் பொறுத்தமட்டில் ஒருவகையில் பயன்பட்டது. குருவைப்பற்றியோ குருதான் ஆன்மாக்களை வழிநடத்திச் செல்பவர் என்பது பற்றியோ தேவாரங்களிலோ பிரபந்தங்களிலோ எங்கும் பேசப் பெறவில்லை. திருமூலர்மட்டுமே தம்முடைய திருமந்திரத்தின் முதல் தந்திரத்தில் குருவின் சிறப்பை விரிவாகப் பாடுகிறார். குருவை 'நந்தி என்று அழைக்கும் திருமூலர், சிவபெருமானுக்குரிய இலக்கணங்களையே குருவுக்கும் கூறுகிறார். இவர் மானிட குருவைக் குறிக்கிறாரா அல்லது இறைவனைக் குறிக்கிறாரா என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. இதையும் வைத்துப் பார்க்கும்பொழுது, அடிகளார் 9ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இரண்டாம் வரகுண பாண்டியன் காலத்தில் வாழ்ந்தார் என்று கொள்வதே சிறப்புடையதாகத் தெரிகிறது. குருவின் திருவடிகளை அண்டி உய்கதி அடைதல் என்ற புதுவழியைத் திருமூலரையடுத்து அடிகளார்தான்