பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிவுரை-0-301 பேசுகிறார். இதில் வியப்பு என்ன என்றால், குருவை அண்டி உய்கதி அடையும் நிலை இவர்களுக்கு முன்னரோ பின்னரோ யாரும் மேற்கொண்டதாக நூல்வழியில் தெரியவில்லை. தனிப்பட்டவர்கள் இப்பயனைப் பெற்றிருக்கலாம். மேலே கூறிய காரணங்களல்லாமல், 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரர் அருளிச்செய்த திருத்தொண்டத் தொகையில் அடிகளார் இடம்பெறாததால் சுந்தரர் காலத்துக்குப் பிற்பட்டவர் என்ற கருத்து வலுப்பெறுகிறது. அடிகளார் குலம் அடிகளார் வரலாற்றைச் செம்மையான முறையில் அறிய எவ்வித வாய்ப்பும் இல்லை. முதன்முதலில் தோன்றிய பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற்புராணம், அடுத்துத் தோன்றிய வேப்பத்துர் நம்பி திருவிளையாடல், அடுத்துத் தோன்றிய கடவுள் மாமுனிவர் இயற்றிய திருவாதவூரடிகள் புராணம் என்ற மூன்றுமட்டுமே அடிகளார் வரலாற்றை ஒரளவு சொல்கின்றன. திருவிளையாடல்கள் இரண்டும் இறைவன் திருவிளையாடல்களைப்பற்றிக் கூறுகின்ற முறையில் நரி பரியாக்கியது குதிரை) கயிறு மாறியது பிட்டுக்கு மண் சுமந்தது என்ற பகுதிகளைச் சொல்லும் வகையில் திருவாதவூரரைப் பற்றியும் சில குறிப்புகளைத் தந்துசெல்கின்றன. அடிகளார் வரலாற்றை முழுவதுமாகச் சொல்ல முற்பட்டது திருவாதவூரடிகள் புராணமேயாகும். இப்புராணந்தான் அடிகளார். ஆமாத்திய குலத்தில் பிறந்தார் என்று சொல்கிறது. இந்தக் குலம்பற்றி அதிகம் அறிய வாய்ப்பு ஒன்றும் இல்லை. சேக்கிழாருடைய பெரியபுராணம் சிறுத்தொண்டர் வரலாறு கூறும்பொழுது அவர் 'மலர்புகழ் மாமாத்திரர்தம் குலம் பெருக