பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302-திருவாசகம் சில சிந்தனைகள்-5 வந்துள்ளார் (பெ.பு:சிறுத்தொண்ட-2) என்று பாடிச் செல்கிறது. இந்தக் குலத்தைப் பற்றிக் கூறவந்த சேக்கிழார் ‘உலகில் வளர் உயிர்க்கெல்லாம் உயர் காவல் தொழில் பூண்டு (பெ.பு:சிறுத்தொண்ட2) என்று பாடுவதைக் 35ΠΤΘόδΥώΥ)ΠΤΗ Ο. தமிழக வரலாற்றில் வாழ்ந்த பெரியோர்களில் ஆமாத்திய குலத்தைச் சேர்ந்தவர்கள் இருவர் காணப் பெறுகின்றனர். ஒருவர் காழிப் பிள்ளையார் காலத்தில் வாழ்ந்த பரஞ்சோதி என்ற சிறுத்தொண்டர் ஆவார். அடுத்துக் காணப்பெறும் ஆமாத்தியர் திருவாதவூரர் ஆவார். இவர் ஆமாத்திய குலத்து உதித்தார் என்பதற்குத் திருவாதவூரடிகள் புராணம் தவிர வேறு சான்று ஒன்றும் இல்லை. ஆனால், திருவாதவூரர் பாண்டி மன்னனுக்கு அமைச்சராக இருந்தார் என்பதை இரண்டு திருவிளையாடல்களும் வாதவூரர் புராணமும் கூறிச்செல்கின்றன. எனவே, வாதவூரர் அமைச்சராக இருந்தார் என்பதையும் சிறுத்தொண்டர் சேனாதிபதியாக இருந்தார் என்பதையும் இவ்விருவரும் ஆமாத்தியர் குலத்தில் உதித்தவர்கள் என்பதையும் இருவருடைய வரலாறுகளும் பேசுகின்றன. இவ்விருவரைத் தவிர இக்குலம்பற்றித் தமிழ்நாட்டு வரலாற்றில் வேறு எவ்விதக் குறிப்பும் இல்லை. அப்படியானால், ஆமாத்தியர் குலம் தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு வரும் குலம் அல்லது குடி என்பவற்றுள் ஒன்றா என்ற வினாத் தோன்றுகிறது. இந்தக் குலம்பற்றி வேறு எவ்விதக் குறிப்பும் கிடைக்காமையால் இவர்கள் தமிழர் பழங்குடியைச் சேர்ந்தவர் அல்லர் என்று நினைக்கத் தோன்றுகிறது. - இந்த நிலையில் கிறிஸ்துவுக்கு நான்கு நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட கெளடில்யனுடைய அர்த்த சாஸ்திரத்தில் வரும் ஒரு பகுதி வியப்பைத் தருகிறது. அக்காலத்தில் வாழ்ந்த மக்களைக் குலம் பிரித்துப் பேசும்