பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிவுரை-0-303 கெளடில்யன் ஆமாத்திய குலம் என்னும் ஒன்றைத் தனியே பிரித்துப் பேசுகின்றான். இக்குலத்தாரைப்பற்றிக் கூறவந்த அவன், இவர்கள் இரண்டு தொழில்களில்தான் ஈடுபடுவர் என்று கூறுகிறான். அடுத்து அந்த இரண்டு தொழில்களைப் பற்றிக் கூறுகின்ற அவன் ஒன்று அமைச்சர் தொழில்; மற்றொன்று படைத்தலைவர் தொழில் என்று குறிப்பிடுகின்றான். கெளடில்யன் கூறிய இந்தக் குலத்தார் வடநாட்டில் வாழ்ந்தவர் என்பது நன்கு தெரிகிறது. நீண்ட காலத்திற்கு முன்னரே இக்குலத்தார் சிலர் தமிழகத்தில் வந்து குடியேறியிருக்க வேண்டும். சிறுத்தொண்டரிடம் வந்த சிவனடியார், வடநாட்டுப் பைராகிக் கோலத்தில் வந்ததும், பிள்ளைக்கறி வேண்டும் என்று கேட்டதும் இக்கருத்தை வலியுறுத்துகின்றன. பரஞ்சோதியார் நரசிம்ம பல்லவனுக்குச் சேனைத் தலைவராக இருந்து வடக்கே படையெடுத்துச் சென்று சாளுக்கிய நாட்டு வாதாபியை அழித்தார் என்று பெரிய புராணம் பேசுகிறது. அடுத்தபடியாக நாம் காணும் ஆமாத்தியர் அடிகளாரே ஆவார். இவர் பாண்டியனிடம் அமைச்சுத் தொழில் பூண்டிருந்தார் என்று இரு திருவிளையாடல்களும் புராணமும் பேசுகின்றன. ஆதலால், இதனை ஏற்றுக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது. அடிகளார் பற்றிய அகச்சான்றுகள் திருவாசகப் பாடல்களில் அடிகளாருடைய வாழ்க்கையில் நிகழ்ந்தனவாகப் ᏞᎻᏮa) செய்திகள் கூறப்பெறுகின்றன. பாண்டியனிடம் குதிரைகளைத் தந்த குதிரைச்சேவகன் அவற்றுக்குள்ள விலையைப் பெற்றுக்கொள்ளவில்லை என்பதை பாண்டியன் தனக்குப் பரிமா விற்று ஈண்டு கனகம் இசையப் பெறாது (2:38-39)