பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304-ல் திருவாசகம் சில சிந்தனைகள் 5 என்ற தொடரில் குறிப்பிடுகிறார். பிட்டு நேர்பட மண் சுமந்த பெருந்துறைப் பெரும் பித்தனே' (469) என்ற தொடரால் பிட்டுக்கு மண் சுமந்ததைப் பேசுகிறார். 'நரியைக் குதிரைப் பரியாக்கி (649) என்ற தொடராலும் 'நரியை பரியாக்கிய நன்மையும் (2:36) என்ற தொடராலும் நரி பரியாக்கிய நிகழ்ச்சியைக் குறிக்கின்றார். தமக்கு அருள் செய்ய வந்த குருநாதர் மரத்தடியில் திருவடி நிலந்தோய அமர்ந்திருந்தார் என்பதைப் "புவனியில் சேவடி தீண்டினன் காண்க (3:6) என்ற தொடராலும், நிலந்தன் மேல் வந்தருளி நீள் கழல்கள் காட்டி (1:59) என்ற தொடராலும் குறிப்பிடுகிறார். தம் வினையைப் போக்கி, பிறவிவேர் அறுத்து அந்தக் குருநாதர் ஆட்கொண்டார் என்ற செய்தியை நூற்றுக்கணக்கான இடங்களில் சொல்லிச் செல்கிறார். இவையெல்லாம் அகச்சான்றுகள் என்று கூறப்பெறும். தம் வாழ்க்கையில் நடந்த இத்தனை செய்திகளையும் நிகழ்ச்சிகளையும் கூறிய அடிகளார், தாம் அமைச்சராக இருந்ததுபற்றி ஏனோ ஒரு வார்த்தைகூடக் கூறவில்லை. தம்முடைய பழைய வாழ்வுபற்றிப் பேசிய இடங்களிலெல்லாம் மகளிர் தொடர்பால் தாம் பட்ட அல்லலைக் கூறினாரேயன்றித் தம் பதவியைப்பற்றி ஒன்றும் கூறவில்லை. திருவடி தீட்சைக்குப் பிறகு மாணிக்கவாசகராக உருவெடுத்த பெருமான், ஓயாது தம் சிறுமையை நினைந்து ‘நாயினும் கடையேன்” என்று பல இடங்களில் பாடிச் செல்கிறார். ஆதலின், தாம் வகித்த அமைச்சர் பதவி அவர் நினைவை விட்டே கழன்றுவிட்டதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இவர் பாடல்களில் மற்றொரு புதுமையையும் காணமுடிகின்றது. திருவாதவூரர் என்ற பெயருடன் சாதாரணக் குடும்பத்தில் பிறந்த ஒருவர், ஒயாது சுற்றம்’ 'சுற்றம்’ என்று பாடிச் செல்வது புதுமையாக உள்ளது.