பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிவுரை_395 பெரும் பதவியில் இருந்த காரணத்தால் நெருங்கிய சுற்றத்தார் என்று கூறிக்கொண்டு பலர் இவரைச் சூழ்ந்திருக்க வேண்டும். இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்பொழுது இவர் ஏதோ அமைச்சர் போன்ற பெரும் பதவியை வகித்திருப்பார் என்று கொள்வதில் தவறில்லை. பாண்டி நாடே பழம்பதியாகவும்” (2:18) என்றும், 'அப்பாண்டி நாட்டைச் சிவலோகம் ஆக்குவித்த (185) . என்றும் Ljol) இடங்களில் பாண்டிய நாட்டின் பெருமையைப் பேசுவதில்கூட அந்நாடு பல வெற்றிகளைக் கண்டது என்றெல்லாம் கூறாமல் இறைத் தொடர்போடு கூடியது என்பதையே வலியுறுத்திச் செல்கிறார். தென்னன் என்ற பழஞ்சொல் பாண்டியனுக்கு உரியது என்பதில் ஐயமில்லை. ஆனால், அடிகளார் தென்னன் என்ற சொல்லைப் பாண்டியனுக்குப் பயன்படுத்தாமல் சொக்கனுக்கே பயன்படுத்துகிறார். பாண்டியர்களைப் பொறுத்தமட்டில் அரிகேசரி, பரகேசரி என்ற பட்டப் பெயர்கள் தந்தைக்கும் மகனுக்கும் மாறி மாறி வரும். வரலாற்றில் காணப்பெறும் அரிகேசரி’ என்ற பட்டப் பெயரை எடுத்து கலையார் அரிகேசரியாய் போற்றி (4190) என்ற தொடரில் இறைவனுக்கே பயன்படுத்துகிறார். இந்த அளவுக்குத் தாம் பிறந்த நாட்டையும் அந்நாட்டு மன்னனையும் இறைவனுடன் தொடர்புபடுத்திப் பாடும் அடிகளார் அப்பாண்டி நாட்டில் ஒரு பெரும் பதவியை வகித்திருக்க வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை. இவற்றையெல்லாம்விடத் திருவாசகத்தில் காணப்பெறும் திருப்படையெழுச்சி என்ற தலைப்பில் வரும் இரண்டு பாடல்கள் சிறந்த போர்த்திறம் அறிந்த ஒருவராலேயே பாடப்பெற்றிருக்க முடியும் என்று நினைப்பதில் தவறில்லை. ஒரு பெரும் படை புறப்படும்பொழுது தூசிப்படை, சூழ்ந்துசெல்லும் படை, இடையிலிருக்கும் படை, இறுதியாகப் பின்னணியில் உள்ள படை