பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306 திருவாசகம் சில சிந்தனைகள்-5 என்றெல்லாம் வேறு பிரித்துப் பாடியுள்ளமை நோக்கத்தக்கது. பறையறைந்து கொண்டு முன்னே செல்லும் படையை அடுத்து அரசர் முதலானோர் தனிக் குதிரைகளின்மேல் செல்வது அன்றையப் படை அணிவகுப்பு முறையாகும். அன்றியும், இக்குதிரைப்படையில் வரும் அரசர் முதலானவர்க்கு தலைக்கு மேல் வெண்கொற்றக்குடை விரிந்து நிற்கும். ஒரு படையின் அணிவகுப்பை, இன்ன இன்ன பகுதியினர் இன்ன இன்ன இடத்தில் இருக்க வேண்டும் என்ற நுணுக்கத்தை இரண்டே பாடல்களில் ஒருவர் பாடினார் என்றால், அவர் போர்த்திறமும் அணிவகுப்பின் நுணுக்கமும் நன்கறிந்தவராக இருத்தல் வேண்டும். இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்பொழுது அடிகளார் அமைச்சராக இருந்திருப்பார் என்ற முடிவுக்கு வருவதில் தவறொன்றும் இல்லை. நேரடியாக அகச்சான்று ஒன்றும் இன்றேனும், இந்த முடிபு மிகவும் பொருத்தமானது என்று அறியப்படும். செய்திகள் கூறுவதிற் குழப்பம் திருப்பெருந்துறை நிகழ்ச்சி சில விநாடிகளே நடைபெற்றது என்று முன்னரும் குறிப்பிடப்பட்டுள்ளது. இறையருள் ஒரு விநாடி நேரத்தில், தான் செய்ய வேண்டியதைச் செய்துவிடும் என்பதற்குத் திருப்பெருந்துறை நிகழ்ச்சி உதாரணமாகும். இந்த நுணுக்கத்தைப் புரிந்துகொள்ளாத திருவாதவூரடிகள் புராணக்காரர், குருநாதர் அடியார்களோடு சில நாட்கள் தங்கியிருந்தார் என்றும் சர்க்கரைப் பொங்கல் செய்து அடிகளார் படைத்தார் என்றும் அப்போதுதான் குருநாதர் திருவடி தீட்சை செய்தார் என்றும். பாடிச்செல்வது ஏற்றுக்கொள்ள முடியாததாகும். இனி, அடுத்தபடியாக நம்முடைய கவனத்தைக் கவர்வது திருப்பெருந்துறைபற்றிய ஒரு செய்தியாகும்.