பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிவுரை 30: இரண்டு திருவிளையாடல்களும் வாதவூரடிகள் புராணமும் திருவாதவூரர், பெரிய அளவில் யொன்னை எடுத்துக் கொண்டு குதிரை வாங்குவதற்குத் தொண்டியை நோக்கிச் சென்றார் என்றும் வழியில் திருப்பெருந்துறை நிகழ்ச்சி நடைபெற்றது என்றும் கூறுகின்றன. அம்மட்டோடு இஸ்லாமல், பெருமானார் தாம் கொண்டுசென்ற பொன் அனைத்தையும் திருப்பெருந்துறைக் கோயில் கட்டுவதற்குச் செலவிட்டுவிட்டார் என்று கூறுகின்றன. இச்செய்தியைக் கேள்வியுற்ற பாண்டியன் அவரை அழைத்துவருமாறு பணியாளர்களை அனுப்பினான் என்றும் கோயிலில் வழிபட்டுக்கொண்டிருந்த திருவாதவூரரரை அரசன் ஆணையைக் கூறி வருமாறு அழைத்தார்கள் என்றும் நம்பி திருவிளையாடல் பேசுகிறது. அந்த இடத்தில் வரும் நம்பி திருவிளையாடற் பாடல் கவனிக்கத் தக்கது. பணியாளர்கள் வந்து அழைக்கின்றவரையில் அடிகளார், தம் பழைய நிலையை அறவே மறந்து இருந்தார் என்றும் அவர்கள் அழைத்தவுடன்தான் தாம் அமைச்சர் என்ற நினைவும் குதிரைகள் வாங்கப் புறப்பட்ட நினைவும் அவருக்கு வந்தது என்றும் புலப்படுத்தி தென்னவன் அமைச்சனே யான் என்ன காரியம் செய்தேன் இவுளி கொள்வதற்கே வந்தேன் பொன்னினை அழித்தேன் அந்தோ புகல ஓர் மாற்றம் உண்டே என்ற முறையில் திருவிளையாடற் பாடல் செல்கிறது. குதிரைகள் வாங்கத் தாம் புறப்பட்டு வந்ததாகவும் கொண்டுவந்த பொன்னைச் செலவிட்டுவிட்டதாகவும் அடிகளார் வருந்திக் கூறினார் என்ற முறையில் இந்தப் பாடல் அமைந்திருப்பினும் இதனை நிலைநாட்ட எவ்விதச் சான்றும் இல்லை. அடிகளார் திருப்பெருந்துறையில் கோயில் கட்டினார் என்றால், அது ஒரு நாள் அல்லது இரு நாளில் முடிகின்ற காரியமன்று. பல மாதங்கள்