பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிவுரை-0-309 நன்கறிந்திருந்த பாண்டிய மன்னர் எவரேனும் இத்திருக்கோயிலைக் கட்டியிருக்க வேண்டும். இது அடிகளாரால் கட்டப்படவில்லை என்பதற்கு வலுவான மற்றொரு சான்றும் உண்டு. சந்நிதியின் வலப்புறத்தில் அமைச்சரின் உடையுடன் கம்பீரமாகக் காட்சியளிக்கும் திருவாதவூரர் சிலை ஒன்று இருக்கிறது. இச்சிலையைப் பிற்காலத்தார் ஒருவேளை வைத்திருக்கலாம் என்று யாரும் கூறமுடியாது. ஏனென்றால், இந்த அற்புதமான ഒങ്ങഖ மண்டபத் தூணிலேயே செதுக்கப்பெற்றுள்ளது. இதனை அடுத்துத் துறவுக் கோலத்தில் உள்ள மணிவாசகர் சிலையும் உள்ளது. கோயிலை அடிகளார் கட்டியிருந்தால், இறைவன் கோயிலில் தம்முடைய சிலையை வைக்கும் எண்ணம் அவருக்கு நிச்சயமாக வந்திராது. இவற்றையெல்லாம் நோக்கும்போது, அடிகளார் காலத்திற்குப் பின்னர், அவர் வரலாற்றை நன்கறிந்திருந்த யாரோ ஒரு பாண்டி மன்னன் இக்கோயிலை நிறுவியிருக்க வேண்டும் என்று சொல்வதில் தவறில்லை. அப்படியானால் அடிகளார் காலத்தில் திருப்பெருந்துறையில் திருக்கோயில் எதேனும் ஒன்று இருந்ததா? இந்த வினாவிற்கு விடை கூறுவது போல அடிகளார் பாடலில வரும் சில அடிகள் அமைந்துள்ளன. திருப்பள்ளியெழுச்சிப் பதிகம் முழுவதும் திருப்பெருந்துறைக் கோயிலையே சுற்றி நிற்கின்றது. அன்றியும் திருப்பெருந்துறை உறை கோயிலும் காட்டி ( 375) என்று வரும் தொடரும் இக்கருத்துக்கு அரண் செய்கின்றது. முன்னரே திருக்கோயில் இருந்தது என்றால், என்ன காரணத்தாலோ அது நன்கு அறியப்பட்டிருக்கவில்லை என்றுதான் தோன்றுகிறது. திருஉத்தரகோசமங்கை