பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41. அற்புதப் பத்து . |அனுபவம் ஆற்றாமை) இன்று கிடைக்கும் திருவாசகப் பதிப்புகளில் பதிக வைப்புமுறை ஒரு மாதிரியாகவே உள்ளது. இப்பதிகங்களைப் பிரித்து ஒவ்வொன்றிற்கு ஒவ்வொரு தலைப்புத் தந்து, யார் எப்பொழுது வெளியிட்டார்கள் என்பது அறியமுடியவில்லை இது ஒருபுறம் நிற்க இன்ன பதிகத்தை அடுத்து இன்ன பதிகம் வரவேண்டும் என்று பிற்காலத்தார் தொகுத்து உள்ளனர். அந்த முறைவைப்பும் பெரும்பகுதி பொருத்தம் இல்லாமல் அமைந்திருப்பதை முன்னரே குறிப்பிட்டுள்ளோம் இன்று நூலுள்ள முறையில் இருபத்தாறாவது பதிகமாக அமைக்கப்பெற்றுள்ளது அதிசயப் பத்தாகும். அதனை அடுத்துப் பதினைந்து பதிகங்கள் தள்ளி அமைந்திருப்பது அற்புதப் பத்தாகும். அதிசயம், அற்புதம் என்ற இரண்டு சொற்களும் ஏறத்தாழ ஒரே பொருளை உணர்த்துவனவாகும். - என்ன காரணத்தால் ஒரே பொருளில் அமைந்துள்ள இரண்டு சொற்களைப் பயன்படுத்தி, இரண்டு பதிகங்கள் பாடியுள்ளார் அடிகளார் என்று சிந்திப்பதில் தவறில்லை. இந்த நினைவுடன், இந்த இரண்டு பத்துக்களையும் அடுத்தடுத்துப் படித்துப் பார்ப்பதால், ஏதேனும் புதிய சிந்தனை தோன்றுகிறதா என்று ஆராய்வதிலும் தவறில்லை. பொதுவாக, அதிசயம் என்ற சொல் பயன்படுத்தப்பெறுகின்ற சூழ்நிலைகளை வைத்து, பின்வருமாறு பொருள் காணலாம்.