பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310_திருவாசகம் சில சிந்தனைகள்-5 போலவோ திருவாசகப் பதிகங்களில் காணப்பெறும் திருவண்ணாமலை, தில்லை, திருக்கழுக்குன்றம் ஆகிய ஊர்களைப் போலவோ திருப்பெருந்துறை, அடிகளாருக்கு முன்னர்ப் பிரசித்தி பெற்றிருந்தது என்று நினைக்க வாய்ப்பில்லை. அடிகளாருக்கு முன்னரே திருப்பெருந்துறையில் ஒரு திருக்கோயில் இருந்தது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டி உள்ளது. அடிகளார் வரலாற்றை அறிந்திருந்த பிற்காலத்தார் அந்த வரலாற்றுக்கு இடம்கொடுக்கும் முறையில் இன்றைய ஆவுடையார் கோயிலைக் கட்டியுள்ளனர். அப்படியானால் பழைய கோயில் என்ன ஆயிற்று அடிகளார் கூற்றுப்படி அங்கே ஒரு திருக்கோயில் இருந்திருப்பது உறுதி. ஒரு வேளை அந்தக் கோயில் சேதமடைந்து, அது இருந்த இடத்தில் இன்றுள்ள புதிய கோயிலைப் பிற்கால மன்னர்கள் கட்டியிருக்கலாம். இஃது எவ்வாறாயினும் மூன்று கருத்துக்கள் நம் சிந்தனைக்குரியன. ஒன்று- அடிகளார் பாடும்போது திருப்பெருந்துறையில் ஒரு திருக்கோயில் இருந்திருக்க வேண்டும். இரண்டு. அடிகளார் காலத்துக்கு பின் வந்தவர்கள் அவர் வரலாற்றை அடித்தளமாகக் கொண்டு இன்றுள்ள ஆவுடையார்கோயிலைக் கட்டியிருக்க வேண்டும். மூன்றாவது- அடிகளார் காலத்துத் திருக்கோயில் சேதமடைந்துவிட, அக்கோயில் இருந்த இடத்திலேயே இப்புதிய கோயிலை நிறுவியிருக்க வேண்டும். - திருமணமானவரா? ஒரு காலத்தில் சைவப் பெருமக்கள் பலராலும் விரிவாகப் பேசப்பட்ட ஒன்று பின்னர் என்ன காரணத்தாலோ அடங்கிவிட்டது. விரிவாகப் பேசப்பெற்ற பிரச்சினை, அடிகளார் திருமணமானவரா இல்லையா