பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிவுரை_31 என்பதுதான். மறைமலை அடிகள் உள்பட ஒருசிலர் அவர் திருமணமானவர் என்று கூறினர். வேறு சிலர் அவ்வாறு கூறுவதே பெரும்பாவம் என்று காதைப் பொத்திக் கொண்டனர். ஆனால், பலப்பல பாடல்களில் தமக்கிருந்த மகளிர் தொடர்புபற்றி அடிகளார். பேசியுள்ளாரே யென்றால், ട്ര}തബ് உண்மையல்ல; ஏனையோர் வாழ்க்கையில் நடைபெறுவதை அடிகளார் தம்மேல் ஏறட்டுக்கொண்டு பாடினார் என்று இவர்கள் கூறினர். இதுபற்றி என்னுடைய சிந்தனைகளை முன்னர்க் கூறியுள்ளேன். எந்த ஒர் இடத்திலும் தம் மனைவியைச் சுட்டும் வகையில் ஒருமையாக எந்தப் பெண்ணையும் அடிகளார் குறிப்பிட்டதாகத் தெரியவில்லை. எல்லா இடங்களிலும் "தையலார்’ "வெஞ்சேல் அனைய கண்ணார்' என்பன போன்ற பன்மைச் சுட்டுகளே இடம்பெற்றுள்ளன. பல மகளிர் தொடர்பை இவை குறிக்கின்றன என்று கொள்வதில் எவ்விதத் தவறும் இல்லை. இலக்கணத்திலேயே மருதத்திணை என்ற ஒன்றிற்கு இடம் கொடுத்த இத்தமிழர், பல மகளிர் தொடர்புபற்றிக் கடிந்து உரைத்தனர் என்று கூறுவதற்கில்லை. அன்றியும், மிக உயர்ந்த பதவியில் இருந்த திருவாதவூரருக்கு இத்தகைய தொடர்புகள் இருந்திருத்தலில் வியப்பு ஒன்றுமில்லை. மேலும், திருவாதவூரரோடு தொடர்பு கொண்ட பல மகளிர் ஒவ்வொருவரும் அவர் தமக்கே உரியவர் என்று கூறி அவர்மாட்டுச் சினந்து கலகம் விளைத்தனர் என்பதை வெஞ்சேலனைய கண்ணார்தம் வெகுளிவலையில் - அகப்பட்டு நைஞ்சேன் நாயேன்........ (427) என்பது போன்ற பாடல்களால் அறியமுடிகிறது. அடிகளார் வகித்திருந்த பதவி காரணமாக இச்சூழ்நிலை உருவாயிற்றோ என்று நினைப்பதில் தவறில்லை.