பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312 திருவாசகம் சில சிந்தனைகள்-5 வாழ்க்கையில் ஒரு காலத்தில் 1./6t) மகளிர் தொடர்புடன் வாழ்ந்த ஒருவர் திடீரென்று ஒரே நாளில் அத்தனையும் துறந்தொழிதல் முடியுமா என்ற வினாவை எழுப்புபவர்கள் இன்றும் உண்டு. எல்லோருடைய வாழ்க்கையிலும் இது நிகழும் என்று சொல்வதற்கில்லை. ஆனால், அருணகிரியார், அடிகளார் போன்றவர்கள் வாழ்க்கையில் இது நிகழ்ந்தது என்பதை நாம் அறிய முடிகிறது. அப்பழங்காலத்தில் பல மகளிர் தொடர்பை நீதிநூலோர் தவிர யாரும் பெருந்தவறாகக் கருதவில்லை. இத்தகைய வாழ்க்கையில் உழன்று நொந்துபோகிறவர்கள்கூட மனம் வருந்தி, இனி என்னே உய்யுமாறு என்று எண்ணி ஐந்தெழுத்தின் புணை பிடிப்பார்களாயின் காம வான் சுறவின் வாயிலிருந்து விடுதலை பெறமுடியும் என்பதற்கு இவ்வரலாறுகள் கலங்கரை விளக்கமாய் ஒளிவீசி நிற்கின்றன. இந்த நிலையில் இருந்தவர்களும் இறைவனால் ஆட்கொள்ளப் பெறுவார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாய் இவை அமைந்தன. இந்த அடிப்படையைப் புரிந்துகொண்டால் இச்செய்திகளைப் பூசி மெழுகவேண்டிய தேவையில்லை என்பதை நன்கறியலாம். நிகழ்ந்ததும் நிகழவேண்டியதும் திருவாசகத்தை உள்ளன்போடு படிக்கின்றவர் களுக்குங்கூடச் சில நியாயமான ஐயங்கள் தோன்றி விடுகின்றன. மிகப் பல இடங்களில் தம் பிறவியை வேரறுத்தான் தம்வினையைச் சுட்டுப் பொசுக்கினான் பழவினை இரண்டையும் போக்கியதல்லாமல் ஆகாமிய வினையும் இல்லாமல் செய்துவிட்டான் என்று பாடியுள்ளார் அல்லவா? 'பிறவியை வேரறுத்தான்’ ‘இனிப்பிறவாமல் காத்தாண்டு கொண்டான்' என்று இறந்தகால