பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிவுரை_313 வாய்பாட்டில் கூறும் அடிகளார், திடீரென்று செடிசேர் உடலம் இது சிதையச் செய்யாய்' என்று எதிர்கால வாய்பாட்டாலும் 'உன் அருளார் அமுதத்தை வாரிக்கொண்டு விழுங்குகின்றேன்’ என்று நிகழ்கால வாய்பாட்டாலும் பாடுவது எவ்வாறு பொருந்தும்? முதலிற் கூறியது உண்மை என்றால், பின்னர் கூறிய இரண்டும் பொருந்தா, பின்னர்க் கூறியவை உண்மை என்றால் முதலில் சொன்னவை பொருந்தா. இவற்றுள் எது உண்மை என்று மிக்க தைரியத்துடன் சிலர் கேட்கின்றார்கள். இவ்வாறு வெளிப்படையாகக் கேட்டால், தம்முடைய பக்தியைக் குறை கூறுவார்கள் என்று நினைக்கும் சிலர் வெளிப்படையாகக் கேட்பதில்லை. ஆனால், அவர்கள் மனத்திலும் இந்த ஐயம் இருந்துகொண்டு இருக்கலாம். இதன் உண்மையைச் சற்று ஆராயலாம். காலம் என்பது அவரவர் மனநிலையைப் பொறுத்து மாறுபடும் இயல்புடையது. காதலர்கள் கூடிய இடத்து ஊழி ஒரு கணமாகவும் பிரிந்த இடத்து ஒரு கணம் ஊழியாகவும் தென்படும் என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட முத்தொள்ளாயிரம் பேசுகிறது. இதனைப் புரிந்துகொண்டால் திருவாசகத்தில் ஐயம் எழாது. பிறவியை வேரறுத்தான், வினையைச் சுட்டெரித்தான் என்பவை உறுதியாக நிகழ்ந்தவை. அதனை அடிகளார் நன்கு அறிகிறார். ஆனால், இவை நடைபெற்றவுடன் வீடுபேற்றை அடைந்திருக்க வேண்டுமே, அது இன்னும் நடைபெறவில்லையே; அது நடைபெறாதிருக்க, இந்த உடல்தான் காரணம். ஆகவே அதைப் போக்கவேண்டும் என்று வேண்டுகிறார். அதேபோல இறையனுபவத்தில் மூழ்கித் திளைக்கின்ற ஒருவருக்கு ஒரு விநாடி அதை விட்டு வெளியே வந்தாலும் அது ஒர் ஊழியாகத் தெரிகிறது. ஆகவேதான், அருளாளர் அமுதத்தை வாரிக்கொண்டு விழுங்குகின்றேன்; விக்கினேன் வினையேன் விதியின்மையால் (417) என்று பாடுகிறார். வினை