பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314-3_திருவாசகம் சில சிந்தனைகள்-5 குருநாதரால் சுட்டெரிக்கப்பட்டுவிட்டது என்பதை நன்றாக உணர்ந்திருந்தாலும்கூட அந்த இடைநேரத்தில் வினை தம்மிடம் இருப்பதாகவே நினைத்து வினையேன்” என்று கூறி வருந்துகிறார். பல்லாண்டுகள் நம்முடன் ஒன்றாகவே இருப்பவர்கள் இறந்துவிடுகிறார்கள்; நாமே அவர்களைக் காட்டில் கொண்டு சென்று சிதையில் வைத்துவிட்டு வந்துவிடுகிறோம். ஆனாலும், ஒரு பதினைந்து அல்லது இருபது நாட்கள்வரை அவர் நம்கூட இருப்பதுபோலவும் அவர் வழக்கமாக அமரும் இருக்கையில் அமர்ந்திருப்பது போலவும் தோன்றுவது இன்றும் உண்மை. இம்மட்டோடன்று. இறந்துபோனவர்கள் நம்மைக் கூப்பிடுவதாக எண்ணி எட்டிப் பார்க்கிறோம். இதெல்லாம் மனப் பிரமையின்பாற் படும். வினையைச் சுட்டெரித்துவிட்டான் பிறவியை வேரறுத்தான் என்பதை நன்கறிந்த அடிகளார் மனப்பிரமை காரணமாக வினையேன்” என்றும் விக்கினேன்’ என்றும் 'செடிசேர் உடலம் இன்னும் இருக்கிறது என்றும் வருந்துவதில் தவறோ வியப்போ ஒன்றுமில்லை. மருத்துவமனையில் உள்ளவருக்கு ஒரு நிமிடம் ஒரு மணியாய்த் தெரிவதுபோலத் திருவருள் பெற்ற அடிகளாருக்கு வீடுபேற்றை அடைவதற்குரிய காலம் வருவதற்கு முன்னுள்ள காலம் ஒரு யுகமாகத் தெரிகிறது. புகுதலும் ஆளுதலும் திருவாசகப் பாடல்களில் பல இடங்களில் வரும் தொடர் புகுந்து ஆண்டான்' என்பதாகும். புகுதல், ஆட்கொள்ளுதல் என்ற இரண்டு செயல்கள் இந்தத் தொடரில் பேசப்பெறுகின்றன. பலருக்கு ஐயத்தைத் தருகின்ற பகுதி புகுந்து என்ற சொல்லுக்குரிய பொருளாகும். புகு' என்ற பகுதியின் அடியாகப் பிறந்து, 'தல்’ என்ற விகுதி பெற்ற தொழிற்பெயராகும் இது. ஒரு