பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிவுரை_315 பொருள் நம் கண் காணவோ, அல்லாமலோ, புறத்தே இருந்து ஒரு வீட்டினுள் அல்லது அறையினுள் சென்று சேர்தலையையே "புகுதல்’ என்ற சொல்லால் அறிவிக்கின்றோம். காற்று. உட்புகுந்தது, ஒளி உட்புகுந்தது, முனியன் அறையினுள் புகுந்தான் @rgöT வரும் தொடர்களைக் கவனித்தால், புகுந்து என்ற சொல்லின் பொருள் நன்கு விளங்கும். புகுதல்’ என்று கூறியவுடன், புறத்தே இருக்கும் ஒரு பொருள் உள்ளே புகுதலைத்தான் குறிக்கின்றோம். முனியன் என்பவன் புறத்தே இருக்கும்போது உள்ளே இல்லை; உள்ளே புகுந்தபோது புறத்தே இல்லை. முனியன் என்ற பருப்பொருளுக்கு இந்த விதி பொருந்தும். காற்று உள்ளே புகுந்தது என்று சொல்லும்பொழுது காற்று வெளியேயும் உள்ளது. அதன் ஒரு பகுதி உள்ளே புகுவதற்குமுன்னர் காற்றின் ஒரு பகுதி உள்ளேயும் இருந்தது. எங்கும் நிறைந்திருக்கின்ற காற்று, வெளியே இருக்கின்ற அதே நேரத்தில் உள்ளேயும் இருக்கின்றது. அதே நேரத்தில் வெளியே இருக்கும் காற்றின் ஒரு பகுதி உள்ளேயும் புகுகின்றது. அதேபோல எங்கும் நிறைந்தவனாகிய இறைவன் புறத்தேயும் உள்ளான் அகத்தேயும் உள்ளான். அறையினுள் இருப்பவர் காற்றினிடையேதான் இருக்கிறார். அதே நேரத்தில் புறத்தேயிருந்து வீசுகின்ற காற்று மேலே வீசுவதையும் உணர்கிறார். அதேபோல, இறைவன் உள்ளேயும் இருக்கின்றான். புறத்தே இருக்கின்ற இறைவன் உள்ளே புகுவதுபோல அடிகளார் உணர்கின்றார். இந்த உணர்வு அடிகளார் போன்றவர்களுடைய தனிப்பட்ட அனுபவம். "வருதல்’ என்ற சொல்லை எடுத்துக்கொண்டு பார்ப்போம். ஒரு பொருள் புடைபெயர்ந்து, நகர்ந்து, உள்ளே புகுதலை, வருதல் குறிக்கும். புடைபெயர்தலுக்கு நடத்தல் அல்லது நகர்தல் இன்றியமையாதது. ஆனால், இறைவன் புடைபெயர்தலோ, நடத்தலோ, நகர்தலோ, இல்லாமலேயும் ஒரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு