பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிவுரை_0-317 செயல் அடுத்தும் நிகழ்ந்ததாகக் கொண்டு இடர் படத் தேவையில்லை. ஆண்டுகொண்டதைவிட அடிகளார் அறியுமாறு உள்ளே புகுதல் அடிகளாருக்கு எல்லையற்ற பேரானந்தத்தை விளைக்கின்றது. எனவே, புகுந்ததையும் உணர்ந்தார், ஆட்கொண்டதையும் உணர்ந்தார். ஒருங்கு நிகழ்ந்த இவ்விரு செயல்களையும் ஒன்றாக அடுக்கிப் புகுந்து ஆண்டான்' என்று பாடியுள்ளார். சீவன் சிவனாகுமோ? 'சிவமாக்கி எனை ஆண்டான்' என்ற தொடர் இரண்டு இடங்களில் வருகின்றது. சற்றுச் சிக்கலான பகுதியாகும் இது. மணிவாசகரைச் சைவசித்தாந்தக் குப்பிக்குள் அடைக்க விரும்புபவர்கள் 'சிவமாக்கி’ என்பதற்குச் சிவபெருமானின் வியாபகத்தில் இவரை உட்படுத்தினான் என்று பொருள் கூறுவர். ஆனால், ஆக்கி என்ற சொல்லுக்கு இவ்வாறு பொருள் கொள்வது கடினம். ஆக்கல் என்ற சொல் முன்னரே வேறொரு வடிவில் இருந்த ஒரு பொருளை மற்றொரு பொருளாக மாற்றுவதைக் குறிப்பதாகும். சோறு ஆக்கினான்’ என்றால், அரிசியைச் சோறாக மாற்றினான் என்ற பொருளையே தரும். அந்த முறையில் பார்த்தால், சீவனாக இருந்த இவரைச் சிவனாக ஆக்கிவிட்டான் என்ற பொருளையே இத்தொடர் தந்துநிற்கின்றது. 'சீவன்’ ‘சிவன் ஆகலாம். ஆனால், அந்த ஆதல் அவனுடைய திருவடியில் தங்கித் திருவருளில் கலந்து விடுதலை பெற்ற சீவனாக இருத்தலையே குறிக்கும். ஆனால் சிவனோடு ஐக்கியமாகி அவன் இயற்றும் ஐந்தொழிலில் இதுவும் பங்குகொள்ளும் என்று நினைப்பது தவறு. சோறாக ஆக்கப்பட்ட அரிசி மறுபடியும் அரிசியாக மாறுவது இல்லை. அதுபோல, சிவனாக ஆக்கப்பட்ட சீவன், சீவனுக்குரிய தன்மையை மீண்டும் பெறுவதில்லை. எனவே, சிவமாக்கி என்ற சொல்லுக்குச் சீவனுக்கு