பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

318-திருவாசகம் சில சிந்தனைகள் 5 விடுதலையைத் தந்து என்ற அளவில்தான் பொருள் கொள்ள வேண்டும். சிவமாக்கி ஆளுதல் என்ற குறிப்பு, தேவாரம் முதலியவற்றில் இடம் பெற்றதாகத் தெரியவில்லை. அடிகளார் வடநாட்டிலிருந்து வந்த ஆமாத்திய குலத்தைச் சேர்ந்தவர் என்பதை முன்னரே குறிப்பிட்டுள்ளோம். அப்பகுதிகளில் வழங்கிய கருத்தாகவும் இது இருக்கலாம். இறைப்பிரேமையும் இறையனுபவமும் 390ஆவது பாடல், இறைப் பிரேமையில் மூழ்கி எழுந்து வெளிப்பட்ட இந்த அருளாளர்கள் இறையனுபவத்தில் திளைக்கின்றனர் என்று கூறுகிறது. இறைப்பிரேமையை divine ecstasy argårsailb, gopugol loušang, divine experience என்றும் குறிக்கலாம். இந்த இரண்டிற்கும் அடிப்படை வேற்றுமை ஒன்றுண்டு. எல்லாம் அடங்கிய நிலையில் ஆனந்த சாகரத்தில் மூழ்கி நான் எனது என்ற அகங்கார மமகாரங்கள் அறவே அற்று, இன்னது செய்கிறோம் என்ற சிந்தனையே இல்லாமல் திடீரென்று ‘எம்பெருமான்' ‘எம்பெருமான்’ என்று அரற்றுவதும் கண்ணிர் ஆறாகப் பெருகுவதும் இறைப் பிரேமையின் இயல்புகளாகும். இந்த நிலையிலிருந்து படிப்படியாக இறங்கும்போது சிரித்தல், களித்தல், தம்மையொத்த பிற அருளாளர்களோடு கலந்து உரையாடி மகிழ்தல் என்ற நிலைகள் படிப் படியாகத் தோன்றும். இதனை இறையனுபவம் என்று குறிக்கலாம். இறைப் பிரேமைக்கும் இறையனுபவத்திற்கு முள்ள ஒரே ஒரு வேற்றுமை முன்னதில் நான் இல்லை; பின்னதில் 'நான்' ஒரளவு தலைதூக்கி நிற்கும். 'நான் அனுபவிக்கிறேன்’ என்ற எண்ணம் அடிப்படையில் இருப்பதால்தான் இதனை முன்னையதிலிருந்து பிரித்து இறையனுபவம் என்று பெயரிட்டுள்ளோம். அனுபவம் என்று கூறினவுடனேயே அனுபவிப்பவன் ஒருவன் உண்டு