பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிவுரை_319 என்பது பெறப்படும். பாலனுபவம் என்பது ஒருவனும் ஒருத்தியும் அனுபவிக்கின்ற அனுபவத்தைக் குறிக்கும். உயர்ந்த காதல் தலையானதாய் சிறப்புடையதாய் இருக்கும்பொழுது இந்த நான் பெரும்பகுதி செயலற்று நின்றுவிடும். அதன் பயனாக அவன்-அவள் என்ற வேற்றுமை பெரிதும் குறைந்துவிடும். இது தலையாய காதலுக்குச் சொல்லப்படுவதாகும். என்றாலும், நான் அனுபவிக்கிறேன் என்ற எண்ணம் அடிப்படையில் இருந்துகொண்டே இருக்கும். இறைப் பிரேமையில் இந்த நிலை முற்றிலும் அடிபட்டுப் போய்விடும். நான்', ‘அனுபவம்', 'அனுபவிக்கப்படுகின்ற பொருள்', என்ற மூன்றும் அனுபவத்துள்ளேயே அடங்கிவிடுதலின் அதனை இறைப் பிரேமை என்று கூறுகிறோம். இதை ஒரளவு விளங்கிக்கொண்ட பிறகு அடிகளார் பாடலில் வரும் சில தொடர்களை மறுபடியும் சிந்திப்பது நலம். உதாரணமாக 390 ஆவது பாடலில் காணப்படும். நான்காவது அடி இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். இந்த அடியில் உணர்வு’ என்ற சொல் மூன்று இடங்களில் பெய்யப்பெற்றுள்ளது. இந்த மூன்று சொற்களும் சொல்வடிவால் ஒன்றாயினும் பொருளவில் ஒன்றுக்கொன்று மாறுபட்டு நிற்பவையாகும். இந்த வேறுபாட்டை அறிந்து உணர்ந்த அருளாளராகிய அடிகளார், இந்த மூன்றையும் வேறுபடுத்த எளிதான ஒரு முறையைக் கையாள்கிறார். மூன்று இடங்களில் காணப்பெறும் உணர்வு என்ற ஒரே சொல்லுக்கு முதல் இரண்டு இடங்களில் அடைமொழியைப் புணர்த்துவதன் மூலம் வேறுபடுத்தி விடுகிறார். முதலில் நிற்பது உரை உணர்வு'; இரண்டாவது நிற்பது இறந்து நின்றதோர் உணர்வு' மூன்றாவது இந்த இரண்டு உணர்வுகளையும் கடக்கக்கூடிய அருளாளர்கள் மட்டுமே உணரக்கூடிய உணர்வாகும்.