பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 திருவாசகம் சில சிந்தனைகள்-5 ஒரு செயல் அல்லது நிகழ்ச்சி அடிக்கடி நடைபெறாவிட்டாலும் முன்னர் என்றோ ஒருநாள் நடைபெற்றதுண்டு. அதேபோல இனியும் என்றோ ஒருநாள் நடைபெறக்கூடும். ஆனால், நாம் எதிர்பார்த்த நேரத்தில், எதிர்பார்த்த இடத்தில் அந்த நிகழ்ச்சி நடைபெற வாய்ப்பில்லை. எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத இடத்தில் இத்தகைய ஒரு நிகழ்ச்சி நடைபெறக் கூடும். நாம் சற்றும் எதிர்பாராத முறையில் அவ்வாறு நடந்தால் அதை அதிசயம் எனலாம். அதிசயப் பத்தின் பத்துப் பாடல்களிலும் தம்மை அடியரில் கூட்டியதை அதிசயம் என்று விளம்புகிறார் அடிகளார். இறைவன் திருவடிகளை விட்டுப் பிரியாத அடியார் கூட்டத்தில் தாமும் ஒருவராக அமரும் வாய்ப்புக் கிட்டியதை அதிசயம் என்று போற்றுகிறார். அற்புதம் இதனினும் முற்றிலும் மாறுபட்டதாகும். நடக்கமுடியாதது என்று அனைவரும் உறுதியாக நம்பிக் கூறும் ஒரு செயல், நம் கண்ணெதிரே நடந்தால் அதனை அற்புதம் (miracle) என்று கூறலாம். திருவாதவூரர் என்ற பெயருடன் அமைச்சராக இருந்து அப்பணியில் முழுமையாகத் தம்மை ஆட்படுத்திக் கொண்ட ஒரு மனிதரை, குதிரை வாங்குவதற்கென்றே வழியோடு சென்ற ஒரு மனிதரைக் குருந்த மரத்தடியில் குருநாதர் வடிவுடன் அமர்ந்திருந்த ஒருவர் சுண்டியிழுத்துத் தம் கால்களில் விழுந்து பணியுமாறு செய்தார்; தம் திருவடிகளை அமைச்சர் தலையின்மேல் வைத்தார். இந்த ஒரு விநாடிச் செயலில், திருவாதவூரர் மறைந்தார்; பாண்டிய அமைச்சர் மறைந்தார்; குதிரை வாங்கச் சென்ற அரசுப் பணியாளர் மறைந்தார். அந்த இடத்தில் மணிவாசகர் என்ற ஒரு புத்தம் புதிய மனிதர் உருவானார். ஒரே விநாடியில் துணையான சுற்றங்கள் அத்தனையும் துறந்தொழிந்தார் (275) தாம் யார் என்பதை மறந்தார்; பகல்