பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/331

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிவுரை_321 ஒர் உதாரணத்தால் இதனைப் புரிந்துகொள்ள முயலலாம். எனை நான் என்பதறியேன்” என்ற தொடரை எடுத்துக்கொண்டு பார்க்கலாம். எனை நான் என்பது அறியேன்” என்பதன் பொருள் என்ன? 'மணிவாசகர் என்ற பெயரால் என்னைச் சுட்டிப் பேசகிறார்கள்; அந்தப் பேச்சு என் காதில் விழும்போது என்னைத்தான் சுட்டிப் பேசுகிறார்கள்; அந்தச் சுட்டுக்குரியவன் நான்தான் என்று உணர்கின்றேன். இந்த அறிவின் அடிப்படையில் பிறந்த உணர்வுதான் இத்தொடரில் பேசப்பெறுகிறது. அடிகளாரின் அனுபவம் மீதுரமீதுாரப் பிறர் சுட்டிய சுட்டும் அதற்குரிய பொருளாகிய நானும் மறையத் தொடங்குகின்றன. அந்த நிலையில் 'மணிவாசகரே என்று யாரேனும் அழைத்திருந்தால், திரும்பிப் பார்த்திருக்க மாட்டார். இதுவே எனை நான்’ என்பதை அறியாத நிலை. ஆனால், இதுவும் முழுநிலையன்று. எனது' என்பதும் ‘நான்’ என்பதும் பெரும்பகுதி மறைந்துவிட்டாலும் இன்னும் கொஞ்சம் மிகச் சிறிய அளவில் 'நான்’ இருக்கிறது என்பதையே இது உணர்த்துகின்றது. அது எப்படித் தெரிகிறது? அறியேன்” என்ற சொல்லின் மூலம் அது வெளிப்படுகிறது. 'அறியேன்” என்னும் தன்மை ஒருமை வினைமுற்றுக்குத் தோன்றா எழுவாயாக இருப்பது நான் என்பதாகும். மணிவாசகர் என்ற பெயருக்குரியவன் நான் என்பதை நான்' அறியவில்லை என்றால், இத்தொடரில் இரண்டு நான்' இருப்பதை அறியலாம். முதலாவதாக இருப்பது சுட்டப்பட்டதாகிய நான்'; இரண்டாவதாக இருப்பது அதனை அறிந்துகொள்ளும் நான் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்வரை வியாபித் இருக்கும் நான்’, முதல் 'நான் ஆகும்; இந்த நான் மறக்கப்படுவதை, அறிகின்ற 'நான் இரண்டாவது நான் ஆகும். இந்த இரண்டாவது 'நான் பொறி புலன்களையும் அந்தக்கரணங்களில் மூன்றையும் கடந்து நிற்பது ஆகும். அந்த நானையே