பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/332

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322-9-திருவாசகம் சில சிந்தனைகள்-5 'அறியேன்” என்ற சொல்லுக்கு எழுவாயாக அமைத்துள்ளார். எனவே, இத் தொடரின்படி பார்த்தால் 'எனை நான்’ என்பதை இன்னது என்று அறியாத நான்' ஆகும். பொறி புலன்களோடு ஒன்று, மனத்தோடு பெரிதும் தொடர்புள்ள நான் இதுவாகும். இப்பாடலின் முதல் அடியில் இந்த நான் மறைந்துவிட்டதைத்தான் எனை நான் என்பதை அறியேன்” என்று பாடுகிறார். 'அறியேன்” என்ற சொல்லைப் பயன்படுத்தியதன் மூலம், இந்த ‘நானை'க் கடந்த ஒரு நான் உண்டு என்பதை உணர்த்திவிட்டார். அந்த நுண்மையான நான், 'அறியேன்” என்ற சொல்லின் எழுவாயாக நிற்கின்றது. 'உரை இறந்து நின்ற உணர்வு இதுபோலத்தான். முதலில் உள்ள உணர்வு, உரைக்குள் அடங்கிய உணர்வு; நிலையில்லாத உணர்வு. இரண்டாவது உணர்வு உரைக்குள் அடங்காததும் நிலைபேறுடையதும் ஆகும். ஆனாலும் இந்த உணர்விலும் நான், பெரும்பகுதி பலமிழந்தாலும், இருக்கத்தான் செய்கிறது. 'அறியேன்” என்ற சொல்லில் ‘நான்' மறைந்திருப்பதுபோல இந்த இரண்டாவது உணர்விலும் நான் மறைந்திருக்கிறது. இரண்டாவது உணர்வு வளர்ச்சி அடைய அடைய இந்த நானும் உணரப்படும் பொருளும் முற்றிலுமாக உணர்வுக்குள் அடங்கிவிடுகின்றன. இங்கு நானும் இல்லை, உணரப்படும் பொருளும் இல்லை. இவை இரண்டுமே உணர்வுக்குள் அடங்கி, முற்றிலும் உணர்வே வடிவாய் நிற்கின்ற நிலையாகும் இது. இதனையே உணர்வதோர் உணர்வு என்றார். அதாவது, இரண்டாவது உணர்வையும் கடந்து நிற்பதேர்ர் உணர்வு என்பதை வலியுறுத்துகிறார். இந்த மூன்றாவது உணர்வுநிலையை, அதாவது, ‘நானும் உணரப்படும் பொருளும் உணர்வுக்குள் அடங்கிவிட்ட நிலையைச் சேக்கிழார் பெருமான்,