பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/333

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிவுரை-9 323 கண்ணப்பர் புராணத்தில் மிக அற்புதமாகப் பாடிச் செல்கிறார். திண்ணன் என்ற வேடனுக்கு நான் இருந்தது; அதன் பயனாக இரு வினைகள் இருந்தன; மும்மலங்களும் இருந்தன. குடுமித்தேவர் இருக்கும் மலையைக் கண்டு, அதுபற்றிக் கேட்டு, அங்கே செல்ல வேண்டும் என்று நினைக்கின்ற வரையில் இருந்த அன்பை உரை உணர்வு' என்று கூறலாம். மலையின்மேல் ஏறி, குடுமித்தேவரைப் பார்த்து, நீ இங்கே தனியே இருக்கக்கூடாது; என்னுடன் வந்துவிடு; ஐயோ, உனக்குப் பசிக்குமே; உணவை யார் தருவார்கள்?’ என்று பேசுகின்றவரையில் உரை உணர்வு கடந்து, நிலைபேறான இரண்டாவது உணர்வுநிலை வளர்கின்றது. இந்த நிலையிலும் நான் சிறிய அளவில் இருக்கத்தான் செய்கிறது. நான் வேட்டையாடிக் குடுமித் தேவரை உண்பிக்க வேண்டும் என்ற நினைவில், நான் ஒரளவு இருப்பினும் அது முன்னர்க் கூறிய நானிலும் வேறுபட்டதாகும். இதில் திண்ணனுடைய நான் இருக்கிறது. குடுமித்தேவர்.பால் கொண்ட அன்பு என்ற உணர்வு வளர்ந்துகொண்டே வருகின்றது. திண்ணனுடைய நானும் அவனுடைய அன்பும் குடுமித்தேவரும் ஒரே நேர்கோட்டில் உள்ளனர். ஐந்தாவது நாள்வரை உள்ள நிலை இது. இந்த ஐந்து நாளிலும் குடுமித்தேவர் இருந்தநிலையில்தான் இருக்கிறார். ஆனால், திண்ணனுடைய நான் சுருங்கிக்கொண்டே செல்கிறது. இடையேயுள்ள அவனுடைய அன்பு மிகவேகமாக வளர்ந்துகொண்டே செல்கின்றது. ஆறாவது நாளில் இந்த அன்பின் பெருவளர்ச்சியில் திண்ணனுடைய நான் முற்றிலும் மறைந்துவிடுகிறது. இந்த வளர்ச்சி நிலை எங்கே தோன்றி எங்கே முடிகிறது என்பதைக் கூறவந்த சேக்கிழார் மிக அற்புதமாக இதனை விளக்குகிறார். காளத்தி மலையை முன்பின் பாராத திண்ணன் அது காளத்தி மலை என்று அறிந்து கொண்டவுடன் அவனையும் அறியாமல்