பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324-3_திருவாசகம் சில சிந்தனைகள்-5 இரண்டாவது நான் மெள்ள வளரத் தொடங்குகிறது என்பதைக் கூறவந்த சேக்கிழார். ஆவது என் இதனைக் கண்டு? இங்கு அணைதொறும் என்மேல் பாரம் போவதொன்று உளது போலும்! ஆசையும் பொங்கி மேன்மேல் மேவிய நெஞ்சும் வேறு ஒர் விருப்பு உற விரையா நிற்கும், - (பெபு. கண்ணப்ப-97) என்று பாடிச் செல்கிறார். இப்பாடலின் மூன்று அடிகளும் திண்ணனுடைய கூற்றாகவே வெளிப்படுகின்றன. இந்தத் திண்ணன், இதனைப் பேசும்பொழுது, நாகன் மகன் திண்ணனாக இல்லை. அவனையும் அறியாமல் தன்மேலுள்ள பாரம் இறங்குகிறது என்று பாடுவதால், பாடிய பின்னர் பழைய திண்ணன் இல்லை. முதலாவது திண்ணன், உரை உணர்வு நிலையில் இருந்தவன் ஆவான். இதனைச் சொல்கின்ற திண்ணன் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சிபெறும் இரண்டாவது உணர்வில் (உரை இறந்த உணர்வில்) நின்று இதனைச் கூறுகிறான், எனவே, இப்பகுதியில் வரும் நான்' முதல் “நானினும் வேறுபட்டு, மூன்றாவது நிலை’ நோக்கிச் செல்லும் இரண்டாவது நான் ஆகும். இதனைச் சேக்கிழார் மேவிய நெஞ்சும் வேறு ஒர் விருப்பு உற என்று கூறியதால் முதல் நானுக்குள்ள விருப்புகள் ஒடுங்கிவிட இரண்டாவது நானு'க்குள்ள விருப்புகள் வளர்கின்றன என்பதைக் குறிக்கவே வேறு ஒர் விருப்பு என்றார். இனி இந்த விருப்பம் இரண்டாவது 'நானோடு தொடர்புடையதாதலின், அதனையும் விட்டு நீங்கி, மூன்றாவதாக உள்ள நானில் கரையப்போகிறது என்பதை 'விரையா நிற்கும்’ என்று பாடினார்.