பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிவுரை_325 இரண்டாவது நானை'க் கட்ந்து, மூன்றாவது நானில்’ புகுகின்றவரையில் அங்கு இருந்தது யார்? காளத்தி மலையைக் காண்பதற்கு முன்னர் இருந்த நாகன் மகன் திண்ணனுக்கு தன் பரிசு, வினை இரண்டும், மலம் மூன்றும் இருந்திருக்கும். இந்த இரண்டாவது நானிலும், வினை இரண்டும் மலம் மூன்றும் அற்றுவிடினும் தன்பரிசு ஒரளவு ஒட்டிக் கொண்டிருக்கிறது. மூன்றாவது நானில்’ இதுவும் மூழ்கிவிடுகிறது என்று கூறவந்த சேக்கிழார், ... யாக்கை தன்பரிசும் வினையிரண்டும் சாரும், மலம் மூன்றும் அற அன்பு பிழம் பாய்த் திரிவார். என்று பாடுகிறார். இரண்டாது நானும் மூழ்கிவிட்டால் அது இருந்த இடத்தில் என்ன மிஞ்சுகிறது என்ற வினாத் தோன்று மன்றே! அதற்கு விடைகூறுவார்போல, நான், முற்றிலும் அழிந்த நிலையை அற' என்ற சொல்லால் சொல்லிவிட்டு எஞ்சியிருப்பது யார் என்ற வினாவிற்கு அன்புப் பிழம்பே, ஒரு வடிவுபெற்று நிற்கின்றது என்கிறார் சேக்கிழார். இந்த அன்பின் விசாலத்தில் குடுமித்தேவரும் சிக்கிக்கொள்கிறார். இப்போது எஞ்சியது திண்ணனும் இல்லை, குடுமித்தேவரும் இல்லை; இடையே நின்ற அன்பு என்ற ஒன்றேதான். அன்பின் விசாலத்தில் இறைவனும் சிக்கிக்கொள்வான் என்பதைப் பக்தி வலையில் படுவோன் காண்க: (342) என அடிகளாரும், 'அன்பு எனும் பிடியுள் அகப்படும் மலையே’ (திருவருட்பா. பரசிவ வணக்கம் 3269) என வள்ளற் பெருமானும் கூறியிருப்பதைக் காண்டல் வேண்டும். வேட்டைக்குப் புறப்பட்ட முதல் நாளில் குடுமித்தேவரைக் காண்கின்றவரையில் திண்ணனும் பெரிதாக நிற்கிறான்; குடுமித்தேவரும் பெரிதாக நிற்கிறார்.