பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326-திருவாசகம் சில சிந்தனைகள்-5 திண்னனுடைய அன்பு மலரத் தொடங்குகிறது. ஆறு நாளில் திண்ணனுக்கும் குடுமித்தேவருக்குமிடையே தோன்றிய அன்பெனும் விதை பெரிய ஆலமரமாக வளர்ந்து, திண்ணனையும் குடுமித்தேவரையும் தன்னுள் அடக்கிக்கொண்டது. ஆறாவது நாளில் திண்ணனும் இல்லை, குடுமித்தேவரும் இல்லை. அன்பு ஒன்றே மலைபோல் வளர்ந்து திண்ணனையும் குடுமித்தேவரையும் உள்ளடக்கி நிற்கின்றது. காட்டியதும் கண்டதும் திருவாசகப் பாடல்களில் மிகப் பல இடங்களில் 'காட்டி’ என்ற சொல் பயன்படுத்தப்படுவதைக் காணலாம். இச்சொல் பெரும்பாலும் சேவடியோடு தொடர்புபடுத்தியே பேசப்பெற்றுள்ளது. 'மலர்க்கழல்கள் அவை காட்டி (3) என்பதுபோன்ற இடங்கள் தவிர திருவடி சம்பந்தம் அல்லாமல் காட்டி என்ற சொல்லைப் பயன்படுத்தும் சில இடங்களும் உண்டு. ‘செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டி, அந்தணன் ஆவதும் காட்டி, திருப்பெருந்துறையுறை கோயிலுங்காட்டி’ (375) என்ற தொடர்கள் திருப்பள்ளியெழுச்சியில் இடம்பெறுகின்றன. திருப்பெருந்துறையில் உறைகின்ற இறைவனைப் பள்ளியிலிருந்து எழவேண்டும் என்று பாடுவது நியாயமானதுதான். ஆனால், அதைப் பாடிக் கொண்டு வரும்பொழுது குருநாதருடைய நினைவு வருகின்றது. ஒரே பாடலில் (375 மூன்றைக் காட்டியதாக அடிகளார் பாடுகிறார். செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டி, திருப்பெருந்துறையுறை கோயிலும் காட்டி, அந்தணனாவதுங் காட்டி என்று பாடியதில் இந்த மூன்றிற்கும் ஏதேனும் தொடர்புண்டோ என்று நினைக்கத் தோன்றுகிறது. செந்தழல் புரை திருமேனியைத் திருப்பெருந்துறைக் கோயிலில் காட்டி என்றும் குருந்த