பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 திருவாசகம் சில சிந்தனைகள்-5 இராஜராஜனுக்கு இருநூறு ஆண்டுகள் முற்பட்ட பல்லவர் காலத்திலேயே தேவாரத் திருப்பதிகங்கள் திருக்கோயில்களில் ஒதப்பெற்றன. பக்கவாத்தியங்களுடன் இவை ஒதப்பெற்றன. இதனைக் திருவல்லம் கல்வெட்டிலும் (கி.பி. 750), அடுத்துத் திருஎறும்பியூர் (திருவரம்பூர்) கல்வெட்டிலும் விரிவாகக் காணலாம். இக்காலங்களில் திருப்பதிகம் என்ற பெயரில்தான் இவை வழங்கப்பெற்றனவே தவிர, தேவாரம் என்ற பெயரே அப்பொழுது இல்லை. இதன்பிறகு இருநூறு ஆண்டுகள் கழித்து இராஜராஜன் பட்டத்துக்கு வருகிறான். தெற்குப் பீகாரைச் சேர்ந்த சதுரானன பண்டிதர் என்ற கோளரி சைவரை அவன் குலகுருவாகக் கொண்டிருந்தான். அவனுக்கு முன்னர் இருந்ததுபோல அவனும் சில கோயில்களில் திருப்பதிகம் விண்ணப்பம் செய்வார் என்ற பெயரில் கல்வெட்டுக்கள் தந்துள்ளான். எனவே, இவன்தான் தேவாரத்தைக் கண்டுபிடித்தான் என்பது முற்றிலும் கட்டுக்கதை. இந்தக் கட்டுக்கதையில் ஒரு சிறிது உண்மை இருந்திருக்குமாயின் சேக்கிழார் ஒரு நூறு பாடல்களாவது பாடியிருப்பார். இந்த நிலையில் அங்கங்கே தேவாரத் திருப்பதிகங்கள் பாடப்பெற்றதுடன் திருவாசகமும் பாடப்பெற்றிருக்க வேண்டும். ஆனால், திருப்பதிகம் என்ற பெயர் மூவர் தேவாரங்கட்கு வழங்கியதேதவிரத் திருவாசகத்திற்கு வழங்கியதாகத் தெரியவில்லை. இராஜராஜன் காலத்திற்கு ஒரு நூற்றாண்டு முன்னரே திருவாசகம் தோன்றிவிட்டது. ஆனால், திருப்பதிகம் விண்ணப்பம் செய்பவர்கள் திருவாசகத்தையும் சேர்த்துப் பாடினரா என்று அறிய வாய்ப்பில்லை. இராஜராஜன் காலத்தில் வாழ்ந்தவர் என்று கருதப்படும் கருவூர்த்தேவர் திருவிசைப்பாவில் தொண்ணுறுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். இவற்றுள்