பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அற்புதப் பத்து 9 25 இரவு வேறுபாட்டை அறிய முடியாதவர் ஆனார்(308) 'அந்தம் ஒன்றில்லா ஆனந்தம் (397) பெற்றவர் ஆனார்; ‘அற்புதமான அமுத தாரைகள் எற்புத் துளைதொறும்’ (174-5) ஏற்றப்பெற்றார். பரா அமுதாகிய திருவாசகத்தைப் பாடும் ஆற்றலைப் பெற்றார். இவை அனைத்தும் பல பிறவிகளில் கிடைத்த வளர்ச்சி அன்று. ஒரே பிறப்பில், ஒரே விநாடியில் இவை அனைத்தும் ஒரே மனிதருக்குக் கிட்டியதென்றால், இதைவிட வேறு அற்புதம் என்ன இருக்கமுடியும்? தமக்குக் கிடைத்த மாற்றத்தை "அற்புதம் விளம்பேன்’ ‘அற்புதம் அறியேன்” என்று பர்டிக்கொண்டு செல்கிறார். இதனால்தான் அதிசயப்பத்தின் வேறாக அற்புதப் பத்து வைக்கப்பெற்றுள்ளது. ஆனால், உட்தலைப்புத் தந்த பெரியவர்கள் இதற்கும் 'அனுபவ ஆற்றாமை' என்ற தலைப்புத் தந்து வழக்கம்போல் குழப்பியுள்ளனர். இப்பதிகத்திலுள்ள பத்துப் பாடல்களில் எட்டாம் பாடல் (576) தவிர ஏனைய பாடல்கள் அனைத்தும் ஒரே கருத்தையே தமது இறுதி அடிகளில் வெளியிடுகின்றன. அதிலும் முதலாம், இரண்டாம் (569, 570) பாடல்கள் ஒருவித அற்புதத்தைப்பற்றிப் பேசுகின்றன. எஞ்சிய ஏழு பாடல்களும் மற்றொரு Ꭷaf6öᏧᏠ$ அற்புதத்தைப்பற்றிப் பேசுகின்றன. இந்த இரு வகை அற்புதங்களிலும் ஒரு பொதுத் தன்மை உண்டு. - பிரபஞ்ச காரணனாய், வாக்கு மனோலயம் கடந்தவனாய், நாம ரூபம் கடந்தவனாய் உள்ள ஒருவன், மானிட வடிவு தாங்கி, தமக்காக, தம்முடைய ஊனக் கண்களும் காணும்படியாக, தமக்கு எதிரே வந்து,