பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிவுரை_331 இந்தக் காலகட்டத்தில் தமிழர்களுக்கே உரிய தனிப்பண்பு வேலை செய்யலாயிற்று. யாரோ ஒருவர் திருமுருகாற்றுப்படையை மனமுருகிப் பாடிக்கொண்டிருந்து விட்டு, அதன்முடிவில் தம் மனத்தில் தோன்றிய கருத்துக்களை வெண்பா வடிவில் வடித்திருக்கின்றார். "குன்றம் எறிந்தாய்' என்று தொடங்கும் வெண்பாவும் அதைத் தொடர்ந்து வரும் ஒன்பது வெண்பாக்களும் இதனைப் பாடியவர் கைச்சரக்காகும். இது பரவப் பரவ இதுவும் திருமுருகாற்றுப்படையைச் சேர்ந்ததென்றே கருதி ஒலையில் எழுதிவிட்டனர். இதில் வேடிக்கை என்னவென்றால், ஒன்பது, பத்தாவது திருப்பாக்களில் இதனைப் பாடியவர் நக்கீரரைப் புகழ்கின்றார். அப்படியிருக்க இப்பாடல்கள் நக்கீரருடைய முருகாற்றுப்படையை அடுத்துவருவது எவ்வளவு பொருத்தமில்லாதது என்பது நன்கு விளங்கும். சைவத் திருமுறைகளில் இன்று காணப்பெறும் ஒன்றுமுதல் பத்துவரையுள்ள பகுதிகளில் முருகனுக்கென்று தனிச்சிறப்போ, பாடல்களோ இல்லை. பத்துப்பாட்டில் இடம்பெற்றுள்ள திருமுருகாற்றுப்படை திருமுறைத் தொகுப்பில் பதினோராம் திருமுறையில் எப்படி எவ்வாறு புகுந்தது என்பது தெரியவில்லை. அன்றியும் நம்பியாண்டார் நம்பி பாடிய முன்னுற்று எண்பதுக்கு மேற்பட்ட பாடல்களில் பெரும்பகுதியானவை மூவர் முதலிகளைப் பற்றியுள்ளன. ஆதலின் இதனையும் திருமுறைத் தொகுப்பினுள் அடக்கவேண்டும் என்று பதினோராம் நூற்றாண்டில் ஒரு சில சைவப்பெருமக்கள் நினைத்திருக்கக்கூடும். அம்மையார் பாடல்களும் சேரமான் பாடல்களும் அளவால் சுருங்கியிருத்தலின் தனித் திருமுறையென்று தொகுக்கமுடியாமல் அவதிப்பட்டவர்களுக்கு