பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/342

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332 ல் திருவாசகம் சில சிந்தனைகள்-5 நம்பியாண்டார் நம்பியின் பாடல்கள் கைகொடுத்தன. எனவே, அம்மையார் பாடல்கள் சேரமான் பாடல்கள் என்பவற்றோடு நம்பியாண்டார் நம்பி பாடல்களையும் சேர்த்து ஒரு திருமுறையாகத் தொகுக்க முற்பட்டனர். அந்த நிலையில் பலராலும் பாராயணம் செய்யப்பெற்ற திருமுருகாற்றுப்படையையும் இத்தொகுப்பினுள் சேர்க்க முற்பட்டனர். i jāt) காலங்களில் வாழ்ந்த 1. Jώt) பெரியவர்களுடைய, ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பாடல்கள் இத்தொகுப்பினுள் இடம்பெற்றபோது திருமுறைத் தொகுப்பில் பதினோராம் திருமுறை என்று பெயரிட்டனர். இந்த நூல் உதிரிப் பாடல்களின் சேர்க்கையாக இருந்தமையின் பலரும் தங்களுக்கு விருப்பமான பாடல்களை இத்தொகுப்பினுள் திணிக்கத் துணிந்தனர். அதன் பயனாகக் கபிலர், பரணர் என்ற பெயருடைய மிகப் பிற்காலத்தார் பாடிய பாடல்களும் இதில் இடம்பெற்றன. பட்டினத்துப் பிள்ளையின் ஐந்து நூல்களும் இதில் இடம்பெறலாயின. ஆழ்ந்து சிந்தித்தால், இந்தப் பதினோராம் திருமுறை எந்தக் கட்டுப்பாட்டிலும், எந்த வரன்முறையிலும் அடங்காது நிற்றலைக் காணலாம். சேக்கிழார் பெருமான் திருமுறை என்ற பெயரைக் கணநாதர் புராணத்தில் பயன்படுத்துவதால் அவர் காலத்தில் இப்பெயர் வழக்கில் வந்துவிட்டது என்று தெரிகிறது. திருமூலரின் ஏடங்கை என்றுதொடங்கும் 1057 ஆம் பாடலில் திருமுறை என்ற சொல் பயன்படுத்தப் பெற்றாலும் இத்திருமுறைகட்கும் அந்தச் சொல்லுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. தேவாரம் என்ற பெயரும் பன்னிரண்டாம் நூற்றாண்டுவரையில் வழங்கப்பெற்றதாகத் தெரியவில்லை. அதுவரையில் வழங்கிய பெயர் திருப்பதியம் (திருப்பதிகம்) என்பதேயாகும்.