பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(!!೩!!Só_K-333 திருமுறைகளின் வைப்புமுறைக் கதை இது என்றால், திருவாசகத்தின் இடம் எங்கே என்று ஆராயத் தொடங்குவதில் தவறில்லை. நம்பியாண்டார் நம்பிகள் பதினோராம் நூற்றாண்டில் சேக்கிழாருக்குச் சற்று முன்னிருந்தவர். நிச்சயமாக அவருடைய காலத்தில் திருவாசகம் மக்களிடைப் பரவி யிருந்திருக்க வேண்டும். அப்படியிருக்க, நம்பியாண்டார் நம்பி மூவரையும்பற்றிப் பாடிவிட்டு, மணிவாசகரைப் பற்றிக் குறிப்புக்கூடத் தராதது ஏன்? தமிழகம் முழுவதையும் சுற்றித் திரிந்து, ஆய்வுசெய்து அடியார்கள் வரலாற்றை இவ்வளவு துல்லியமாகப் பாடிய சேக்கிழார் பெருமான் திருவாசகத்தை அறிந்திருக்கவில்லையா என்ற வினாவிற்கு விடையிறுப்பது கடினம். நின்றசீர் நெடுமாறனையும் பாண்டி நாட்டையும் பாடும்பொழுது சேக்கிழார் பெருமானுக்கு மணிவாசகர் எப்படி நினைவுவராமல் போய்விட்டார்? பெரிய புராணத்தில் மணிவாசகருக்கு இடமில்லையென்றாலும் பாண்டி நாட்டைப் பாடும்பொழுது மணிவாசகர் பிறந்த நாடு என்றாவது சொல்லியிருக்கலாமே? அப்படியானால் சேக்கிழார் வாழ்ந்த பன்னிரண்டாம் நூற்றாண்டில் தேவாரப் பதிகங்கள் செல்வாக்குப் பெற்றிருந்ததுபோலத் திருவாசகம் வழக்கில் இல்லாமல் போய்விட்டதா என்ற ஐயத்திற்குப் பதிலிறுக்க முடியவில்லை. இவற்றையெல்லாம் நோக்கும்போது திருமுறைகள் வகுக்கப்பட்ட காலம் மிகமிகப் பிற்காலத்தில் இருக்குமோ என்ற ஐயம் வலுவடைகிறது. சோழர்கள் காலத்தில் தேவாரம் பெருஞ்செல்வாக்குப் பெற்றிருந்தது. அடுத்த நிலையில் . திருவிசைப்பா இடம்பெற்றிருந்தது. என்ன காரண்த்தாலோ திருவாசகம் அவ்வளவு செல்வாக்குப் பெற்றிருந்ததாகத் தெரியவில்லை. இக்கருத்து மேலும் சிந்திப்பதற்குரியது.