பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/344

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334-திருவாசகம் சில சிந்தனைகள்-5 பாடும்பொழுதே படியெடுத்தல் தமிழகத்தைப் பொறுத்தவரையில் தேவாரம், திருவாசகம், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் ஆகிய பெரும் நூல்கள் இன்றளவும் இருந்துவருகின்றன. திருக்குறளைப் போல இவற்றுள் பெரும்பகுதியானவை பத்து அல்லது பதினொரு பாட்டுக்களால் ஆக்கப் பெற்றிருத்தலின் இடைச்செருகல்களுக்கு இடமில்லாமல் போய்விட்டது. இந்தப் பாடல்களைப் பற்றிச் சிந்திக்கும்போது இவற்றின் தனிச்சிறப்பை அறிதல் நலம். புத்த தேவனும் இந்த நாட்டில் தோன்றியவன்தானே. ஆனந்தன் முதலிய பல சீடர்கள் புத்தனுடன் கூடவே இருந்தனர். என்றாலும், அப்பெருமகனுடைய வார்த்தைகளை அவ்வப்போது யாரும் பதிவுசெய்ததாகத் தெரியவில்லையென்றே பலரும் நம்புகின்றனர். புத்ததேவன் பரிநிர்வாணம் அடைந்த பிறகு சீடர்கள் ஒன்றுகூடித் தங்கள் குரு கூறியவற்றைத் தங்கள் நினைவில் இருந்தவரையில் எழுதித் தொகுத்தனர். மேலை நாட்டைப் பொறுத்தவரை ஏசுநாதர் கூறியவற்றை யாரும் உடனுக்குடன் எழுதிவைக்கவில்லை. கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்து அவர் மேலே சென்ற பிறகு இந்தச் சீடர்கள் ஒன்றுகூடித் தம்முடைய குருநாதர் கூறியவற்றைத் தத்தம் நினைவில் இருந்த முறையில் ஹீப்ரூ மொழியில் பதிவு செய்தனர். அதன் விளைவாக இவர்கள் கூற்றிடையே முரண்பாடுகள் மிகுதியாக இருந்தன. ஆனால், இம்முறைக்கு மாறாக மூவர் முதலிகள் ஆழ்வார்கள் போன்ற அருளாளர்களுடன் இருந்த பக்தர்கள் இவர்கள் பாடியவற்றைப் பாடும் பொழுதே உடனுக்குடன் எழுத்தில் வடித்து விட்டனர். எனவே, இச்சொற்கள் அவருடைய கூற்றுத் தானா என்ற ஐயத்திற்கு