பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/345

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிவுரை_0-335 இடமேயில்லாமல் போய்விட்டது. அதன் பயனாக இந்த ஆயிரம் ஆண்டுகளாக, இப்பாடல்கள் பழக்கத்திலிருப்பினும் பெருமாற்றங்கள் ஏதும் தோன்ற இடமில்லாமல் போய்விட்டது. ஏடெழுதுவோரின் கவனக்குறைவு காரணமாக எழுத்துப் பிழைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காணப்படலாம். இதனால் மன்னிக்க முடியாத பெருந்தவறு எதுவும் நிகழ்ந்துவிடவில்லை. தேவாரங்களும் இப்படி எழுதப்பட்டவைதான்; திருவாசகமும் அப்படியே. அமைச்சர் பதவியைத் துறந்து ஆடிப் பாடிக்கொண்டு ஆண்டிபோலத் திரிந்தமையின் அடிகளார் காலத்தில் அவரைப் பயித்தியமென்று பலரும் பேசினர். என்றாலும் ஒரு சிலர் இப்பெருமகனின் உண்மைச் சொரூபத்தைப் புரிந்துகொண்டு அவரைத் தொடர்ந்து சென்றிருக்க வேண்டும். அங்ங்னம் சென்ற பெருமக்களே அடிகளார் பாடப் பாட அப்படியே அவற்றைப் படியெடுத்துக் கொண்டனர். இந்த அடிப்படையில்தான் பிற்காலத்தார் அடிகளாரைத் திருவாசகம் பாடச்செய்து தில்லைக் கூத்தனே படியெடுத்துக் கொண்டான் என்று கதையாகக் கூறினர். பக்திப் பாடல்களுள் திருவாசகத்தின் தனி இடம் தேவாரப் பாடல்களைப்போல் அல்லாமல் திருவாசகப் பாடல்களின் அமைப்புமுறையே முற்றிலும் வேறுபட்டு நிற்கின்றது. சுந்தரர் காலம்வரையில் பண்முறை பழக்கத்தில் இருந்துவந்தது. மாபெரும் அறிஞராகிய திருவாதவூரர் இவற்றைப் படித்திருத்தல் கூடும். அப்படியானால் சுந்தரரை அடுத்து, அறுபது அல்லது எழுபது ஆண்டுகள் கழித்துவரும் அடிகளார் பண் முறையை ஏன் கையாளவில்லை? -